சைவ, வைணவ சமயங்கள் குறித்த பொன்முடி பேச்சு வழக்கு: வழக்கை முடித்து வைத்த உயர்நீதிமன்றம்! Hate speech case against former minister Ponmudi dropped by court

சைவ, வைணவ சமயங்கள் குறித்த பொன்முடி பேச்சு வழக்கு: வழக்கை முடித்து வைத்த உயர்நீதிமன்றம்! Hate speech case against former minister Ponmudi dropped by court

பொறுப்பான பதவியில் இருந்தவர் இதைத் தவிர்த்திருக்க வேண்டும்; காவல்துறை முறையான விசாரணை நடத்த வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!

சைவ மற்றும் வைணவ சமயங்கள் குறித்தும், பெண்கள் குறித்தும் வெறுப்புப் பேச்சு பேசியதாக, முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராகச் சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை இன்று முடித்து வைத்து உத்தரவிட்டது. 

இந்த விவகாரத்தில், காவல்துறை முறையாக விசாரணை நடத்தவில்லை என்றும், பொன்முடி போன்ற பொறுப்பான பதவியில் இருந்தவர்கள் இதுபோன்ற பேச்சுகளைத் தவிர்த்திருக்க வேண்டும் என்றும் நீதிபதி கருத்துத் தெரிவித்தார்.

இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர், பொன்முடிக்கு எதிராக அளிக்கப்பட்ட புகார்கள் மீது ஆரம்பகட்ட விசாரணை நடத்தப்பட்டு, அதில் போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவை முடித்து வைக்கப்பட்டதாகத் தெரிவித்தார். இதற்குப் புகார்தாரர்கள் தரப்பு வழக்கறிஞர்கள், புகார் அளித்தவர்களிடம் முறையாக விசாரணை நடத்தாமலேயே காவல்துறை வழக்கை முடித்துவிட்டதாகக் குற்றம் சாட்டினர். மேலும், இது தொடர்பாகச் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தனிநபர் புகார் தாக்கல் செய்யப்பட்டு, அந்த வழக்கு எம்பி - எம்எல்ஏ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, "பொறுப்பான பதவியில் இருந்த பொன்முடி, இதுபோன்ற பேச்சுகளைத் தவிர்த்திருக்க வேண்டும். அதேபோல், காவல்துறையினரும் முறையாக விசாரணை நடத்தி, குறைந்தபட்சம் புகார் அளித்தவர்களிடம் விசாரணை நடத்தியிருக்க வேண்டும்" என்று தனது அதிருப்தியைத் தெரிவித்தார். புகார்கள் முடித்து வைக்கப்பட்டதை எதிர்த்துப் புகார்தாரர்கள் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தை அணுகலாம் என்றும், தனிநபர் புகார் தாக்கல் செய்யலாம் என்றும் அனுமதி அளித்த நீதிபதி, உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து எடுத்த இந்த வழக்கை முடித்து வைப்பதாக உத்தரவிட்டார்.

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks