நரகலாகிப்போன தேசிய நெடுஞ்சாலை... நேருக்கு நேர் மோதிய 2 லாரிகள்: பதைபதைக்க வைக்கும் விபத்து! Two Lorries Collide Head-On Near Thiruvallur

நரகலாகிப்போன தேசிய நெடுஞ்சாலை... நேருக்கு நேர் மோதிய 2 லாரிகள்: பதைபதைக்க வைக்கும் விபத்து! Two Lorries Collide Head-On Near Thiruvallur
ஓட்டுநர்கள் காயத்துடன் மீட்பு; டயர் துகள்கள் பரவியதால் வாகன ஓட்டிகள் அவதி!


திருவள்ளூர் அருகே சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், இரண்டு ஓட்டுநர்களும் பலத்த காயமடைந்தனர். இதில் ஒருவர் லாரியில் சிக்கியதால், அவரை மீட்பதற்காக ஜேசிபி இயந்திரம் பயன்படுத்தப்பட்டது, இது அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை நடந்த இந்த விபத்து, போக்குவரத்து நெரிசலுக்கு வழிவகுத்தது. மோதலின் வேகத்தில், லாரியின் ஒரு கதவு முற்றிலுமாக சிதைந்து உள்ளே ஓட்டுநர் குருமூர்த்தி சிக்கிக்கொண்டார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் லாரியின் கதவைப் பிரித்து, சுமார் ஒரு மணி நேரம் போராடி குருமூர்த்தியை மீட்டனர். காயமடைந்த இரு ஓட்டுநர்களும் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

விபத்து நடந்த லாரிகளில் ஒன்று, டயர் தொழிற்சாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட ரப்பர் துகள்களை ஏற்றிச் சென்றது. விபத்தின் காரணமாக அந்தத் துகள்கள் சாலையில் சிதறி, காற்றின் வேகத்தில் பறந்து சாலை முழுவதும் பரவியதால், பின்னால் வந்த வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks