தமிழகம் முழுவதும் பல கடைகளில் தடையை மீறி விற்பனை; உணவு பாதுகாப்புத் துறைக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!
தமிழக உணவு பாதுகாப்புத் துறையால் தடை செய்யப்பட்ட மயோனைஸ் (Mayonnaise) இன்னும் பல கடைகளில் தடையை மீறி விற்பனையாகி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுகாதாரக் காரணங்களுக்காக மயோனைஸ் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பல உணவகங்கள் மற்றும் கடைகளில் இந்தத் தடை அமல்படுத்தப்படாமல் உள்ளது. ஒரு சில கடைகளைத் தவிர, பெரும்பாலான இடங்களில் மயோனைஸ் தாராளமாகக் கிடைப்பதாகச் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இந்த விதிமீறல்களைக் கண்டுகொள்வதில்லை என்றும், இதனால் பொதுமக்கள் தொடர்ந்து சுகாதாரக் கேடுள்ள உணவுகளைச் சாப்பிடும் அபாயம் இருப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
பொதுமக்களின் ஆரோக்கியத்தைக் கருத்தில்கொண்டு, உணவு பாதுகாப்புத் துறை உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு, தடையை மீறி மயோனைஸ் விற்பனை செய்யும் கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
