தியேட்டர் கேன்டீனில் தரமற்ற சிப்ஸ்: உணவு பாதுகாப்புத்துறை ஆய்வு! Food Safety Dept Raids Theatre Canteen in Coimbatore

தியேட்டர் கேன்டீனில் தரமற்ற சிப்ஸ்: உணவு பாதுகாப்புத்துறை ஆய்வு! Food Safety Dept Raids Theatre Canteen in Coimbatore

பழைய எண்ணெய் வாசம் வந்ததாகப் புகார்; சிப்ஸில் மாதிரிப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது!

கோவை மாவட்டம், போத்தனூரில் உள்ள அரசன் திரையரங்கின் கேன்டீனில் விற்கப்படும் சிப்ஸில் பழைய எண்ணெய் வாசம் வந்ததாக வாடிக்கையாளர்கள் அளித்த புகாரின் பேரில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இன்று ஆய்வு நடத்தினர்.

மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் அனுராதா தலைமையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சோதனையின்போது, கேன்டீனில் காலாவதியான பொருட்கள் எதுவும் இல்லை என்பதும், எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ. உரிமம் இருப்பதும் உறுதி செய்யப்பட்டது. ஆனால், உணவுப் பொருட்கள் சரியான முறையில் சேமித்து வைக்கப்படவில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, சிப்ஸ் மாதிரி பரிசோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், அனைத்து விதிமுறைகளையும் முறையாகப் பின்பற்றுமாறு திரையரங்க நிர்வாகத்திற்கு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். முக்கியப் படங்கள் வெளியாகும் நாட்களில், திரையரங்க கேன்டீன்களில் தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.


கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks