பட்டாசு கடை அமைக்க அக்டோபர் 10-க்குள் விண்ணப்பிக்கலாம்! Apply for Firecracker Shop License in Coimbatore

பட்டாசு கடை அமைக்க அக்டோபர் 10-க்குள் விண்ணப்பிக்கலாம்! Apply for Firecracker Shop License in Coimbatore

மாவட்ட ஆட்சியர் பவன்குமார் அறிவிப்பு; பாதுகாப்பு விதிகள் கட்டாயம்!

வரவிருக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கோவை புறநகர் பகுதிகளில் தற்காலிகப் பட்டாசு கடைகள் அமைக்க விரும்புவோர் அக்டோபர் 10-ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.

விண்ணப்பதாரர்கள், கடைக்கான புல வரைபடம், சாலை வசதி, கொள்ளளவு, சொத்து வரி ரசீது, வாடகை இடமெனில் உரிமையாளரின் சம்மதக் கடிதம் உள்ளிட்ட விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

பாதுகாப்புக் காரணங்களுக்காகச் சில முக்கிய விதிமுறைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன:

* மாடிக் கட்டடங்களில் பட்டாசு இருப்பு வைக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

* கடைகள் குடியிருப்பு, பள்ளி, வழிபாட்டுத் தலங்கள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், தொழிற்சாலைகள் மற்றும் ரயில்பாதை போன்ற பகுதிகளுக்கு அருகில் அமைக்கக் கூடாது.

* பட்டாசு கடைகளுக்கு இருவழிப் பாதை அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விதிமுறைகளைப் பின்பற்றி விண்ணப்பிக்கும் நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks