சேலம் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு; குற்றவாளிகளுக்குத் தலா ரூ.500 மற்றும் ரூ.300 அபராதம்!
கடந்த 2020-ஆம் ஆண்டு சங்ககிரி அருகே 10 சவரன் நகை கொள்ளையடித்த வழக்கில், இரண்டு பேருக்குத் தலா 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சேலம் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சங்ககிரி அருகே கண்ணம்மா என்பவரது வீட்டில், கத்தியைக் காட்டி மிரட்டி 10 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இது தொடர்பாக, எடப்பாடியைச் சேர்ந்த சிவசக்தி (எ) சக்திவேல் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினத்தைச் சேர்ந்த ராஜ்குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை சேலம் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயகுமார், குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கும் தலா 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார். மேலும், முதல் குற்றவாளிக்கு ரூ. 500 அபராதமும், இரண்டாவது குற்றவாளிக்கு ரூ. 300 அபராதமும் விதிக்கப்பட்டது.