குடும்பப் பிரச்சினையால் மனவேதனை; ரயில்வே போலீசார் விசாரணை!
குடும்பப் பிரச்சினை காரணமாக மனவேதனையில் இருந்த மீனவர் ஒருவர், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தூத்துக்குடியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியைச் சேர்ந்த மீனவர் ராஜாமணி (33), குடும்பப் பிரச்சினை காரணமாக மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது. நேற்று இரவு சில்வர்புரத்தில் உள்ள தனது அக்கா வீட்டிற்குச் சென்ற அவர், பின்னர் வீட்டிற்குச் செல்வதாகக் கூறி புறப்பட்டார்.
ஆனால், அவர் தூத்துக்குடியிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்தச் சம்பவம் குறித்து, தூத்துக்குடி இருப்புப் பாதை ரயில்வே காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் மகா கிருஷ்ணன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
