செங்கோட்டையன் டெல்லி பயணம்: அமித்ஷாவுடன் திடீர் சந்திப்பு..பின்னணி என்ன? Expelled AIADMK Leader Sengottaiyan Meets Amit Shah in Delhi

செங்கோட்டையன் டெல்லி பயணம்:  அமித்ஷாவுடன் திடீர் சந்திப்பு..பின்னணி என்ன?  Expelled AIADMK Leader Sengottaiyan Meets Amit Shah in Delhi

தர்மம் வெல்லும் என்று கூறிய செங்கோட்டையன் திடீர் டெல்லி பயணம்; அரசியல் வட்டாரங்களில் அனல் பறக்கும் விவாதம்!

அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியால் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், இன்று காலை கோவையில் இருந்து டெல்லிக்குப் புறப்பட்டு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் இல்லத்தில் இருப்பது பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் அ.தி.மு.க.வில் இருந்து விலகிச் சென்றவர்களை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வர, 10 நாட்கள் அவகாசம் வழங்குவதாகச் செங்கோட்டையன் அறிவித்தார். இந்தப் பேச்சு எடப்பாடி பழனிசாமி தரப்பை அதிருப்திக்கு உள்ளாக்கியது. அதன் விளைவாக, செங்கோட்டையனை கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கி பழனிசாமி உத்தரவிட்டார். இந்த நடவடிக்கைக்குப் பிறகு செங்கோட்டையனின் ஒவ்வொரு நகர்வும் அரசியல் வட்டாரங்களில் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு வந்தன.

டெல்லிக்கு புறப்படுவதற்கு முன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன், ஆன்மிகப் பயணமாக ஹரித்வாருக்குச் செல்கிறேன். ராமரை வணங்கப் போகிறேன். இதுவரை யாரையும் சந்திக்கவில்லை, யாரிடமும் பேசவில்லை. எனது கருத்தை பலர் வரவேற்றுள்ளனர், என்று தெரிவித்தார். 

மேலும், கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டது குறித்துக் கேட்டபோது, கட்சி பதவிகளில் இருந்து நீக்கியது மகிழ்ச்சியே, என்று கூறியதோடு, தர்மம் வெல்லும், என்றும் சூசகமாகத் தெரிவித்தார். பா.ஜ.க. மூத்த தலைவர்களைச் சந்திப்பீர்களா என்ற கேள்விக்கு, அவர் தெளிவான பதில் அளிக்காமல் தவிர்த்தார்.

ஆனால், அவரது இந்த ஆன்மிகப் பயணம், அரசியல் பயணமாக மாறி, இன்று பிற்பகலில் டெல்லியில் அமித்ஷாவின் இல்லத்தில் அவர் இருப்பது உறுதியாகியுள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஒருசில அதிருப்தி தலைவர்களை இணைக்கும் முயற்சியில் செங்கோட்டையன் ஈடுபடலாம் என ஏற்கனவே கூறப்பட்டு வந்த நிலையில், அவரது இந்த திடீர் டெல்லி பயணம் அ.தி.மு.க. வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமித்ஷா உடனான இந்த சந்திப்பின் நோக்கம் என்ன, செங்கோட்டையனின் அடுத்தகட்ட நகர்வு என்ன என்பது குறித்துத் தமிழக அரசியல் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளது.


கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks