விஜய் ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்.. மீண்டும் திரைக்கு வரும் சூப்பர் ஹிட் 'குஷி' திரைப்படம்; வெளியான மாஸ் அப்டேட்! Vijay's Movie Re-release, Kushi Film Back in Theaters

விஜய் ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்.. மீண்டும் திரைக்கு வரும் சூப்பர் ஹிட் 'குஷி' திரைப்படம்; வெளியான மாஸ் அப்டேட்!  Vijay's Movie Re-release, Kushi Film Back in Theaters

தளபதி விஜய்யின் திரைப்பயணத்தில் திருப்புமுனை ஏற்படுத்திய காதல் காவியம்; டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் ரீ-ரிலீஸ்!

தமிழ் சினிமா ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2000-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற குஷி திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது என ஒரு மாஸ் அப்டேட் வெளியாகி விஜய் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தச் செய்தி சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் விஜய் மற்றும் ஜோதிகா நடிப்பில் உருவான குஷி திரைப்படம், ஒரு அழகான காதல் கதைக்களத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டது. இந்தப் படம் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், விஜய் திரைப்பயணத்தில் ஒரு திருப்புமுனையாகவும் அமைந்தது. அதுமட்டுமின்றி, உலக அளவில் அப்போது ரூ. 22 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தி சாதனை படைத்தது.

இந்த நிலையில், 'குஷி' திரைப்படம் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்டு, வரும் செப்டம்பர் 25-ஆம் தேதி மீண்டும் திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது, இந்தப் படத்தின் ரசிகர்களுக்கு ஒரு சிறந்த ட்ரீட் ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks