அரியலூரில் விஜய் பரப்புரை: 25 நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி! Vijay's Rally in Ariyalur Gets Police Nod with 25 Conditions

அரியலூரில் விஜய் பரப்புரை: 25 நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி! Vijay's Rally in Ariyalur Gets Police Nod with 25 Conditions

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் அரியலூரில்  பிரச்சாரம் செய்ய 25 நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி.

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் 13 ஆம் தேதி மதியம் அரியலூர் பேருந்து நிலையம் முன்பாகத் தனது பரப்புரையை மேற்கொள்ள இருக்கிறார் அவர் பிரச்சார பரப்புரைக்கு அனுமதி கேட்டுக் காவல்துறையிடம் தாவைக்க பொதுச்செயலாளர் புசிய ஆனந்த் கடந்த வாரம் நேரில் வந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்திருந்தார். 

இந்நிலையில் இன்று தமிழக வெற்றிக்காகத் தலைவர் பிரச்சாரத்திற்கு காவல்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். 

திருச்சியிலிருந்து சாலை மார்க்கமாகத் திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் கீழப்பழுவூர் வந்தடைந்து பின்னர் வாரனவாசி கலெக்டர் ரவுண்டனா வழியாக அரியலூர் பழைய பேருந்து நிலையம் வந்து வாகனத்தில் இறந்தபடியே நடிகர் விஜய் தனது பரப்புரையை மேற்கொள்கிறார் பின்னர் அண்ணா சிலை கல்லங்குறிச்சி ரவுண்டு நான் வழியாகப் பெரம்பலூர் புறவழிச்சாலையில் பயணித்துக் குன்னம் செல்ல உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. 

காவல்துறை அளித்துள்ள 25 நிபந்தனைகள்:

1. தமிழக வெற்றி கழகத்தினர் காவல் துறை விதிகளுக்கு உட்பட்டு நடக்க வேண்டும் 

2. மதியம் ஒன்றரை மணிக்கு விஜய் பரப்புரை மேற்கொள்ள உள்ளதால் காலை 11. 20 மணிக்குள் அக்கட்சியினர் பரப்புரை நடக்கும் இடத்திற்கு வருவதை உறுதி செய்ய வேண்டும். 

3. விஜய் திருச்சியிலிருந்து சாலை மார்க்கமாகப் புறப்பட்டு அரியலூர் வரும் வரை ரோட் சோ மேற்கொள்ளக் கூடாது. எந்தப் பகுதியிலும் வரவேற்பு நிகழ்ச்சி நடத்தக் கூடாது. 

4. பயண வழிப்பாதை மற்றும் பரப்புரை நடக்கும் இடத்தில் பட்டாசுகள் வெடிக்க அனுமதி இல்லை. பரப்புரைக்கு வருகை தரும் தொண்டர்கள் எளிதில் தீப்பற்றக்கூடிய எந்தப் பொருளையும் வைத்திருக்கக் கூடாது. இசைக்குழு பயன்படுத்தக் கூடாது 

5. பரப்பரைக்கு வரும் வாகனங்களுக்கான பார்க்கிங் வசதிகளைக் கட்சியினரே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். பார்க்கிங் இடங்கள் எவை என்பது குறித்து முன்னரே அறிவித்து விட வேண்டும் போக்குவரத்திற்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தக் கூடாது. 

6. கர்ப்பிணி பெண்கள் குழந்தைகள் வயது முதிர்ந்தவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் வருவதை முடிந்த அளவு தவிர்த்திட வேண்டும். கூட்ட நெரிசலிலிருந்து தவிர்க்கப் பெண்கள் மற்றும் பெரியவர்களுக்குத் தனி இடம் ஒதுக்கி இருக்கைகள் அமைக்க வேண்டும். 

7. பரப்புரையில் ஈடுபடும் எவரும் கையில் லத்தி குச்சி மற்றும் பிற ஆயுதங்கள் வைத்திருக்கக் கூடாது. 

8. பொதுமக்களுக்கும் சட்டம் ஒதுங்கி இருக்கும் ஆம்புலன்ஸ் தீயணைப்பு வாகனம் போன்றவற்றிற்கு இடையூறு ஏற்படாத வகையில் நிகழ்ச்சி நடத்தப்பட வேண்டும். 

9. பொதுமக்கள் பரப்புரையை சிரமமின்றி பார்க்கும் வகையில் தடுப்பு அறன்களை கட்சியினரை அமைத்துத் தர வேண்டும். 

10. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு தேவையான குடிநீர் வசதி முதலுதவி வசதி ஆம்புலன்ஸ் நடமாடும் கதிரைகள் சிசிடிவிகள் தீத்தடுப்பு சாதனங்கள் ஆகியவற்றை காவல்துறை நகராட்சி நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலரிடம் கலந்து ஆலோசித்துத் தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். 

11. போக்குவரத்தை சரி செய்யும் பொருட்டும் பரப்புரை நடைபெறும் அரியலூர் பேருந்து பகுதியில் கட்சியினரை ஒழுங்கு படுத்துவதற்கும் காவல்துறையினருக்கு உதவியாகப் போதுமான தன்னார்வலர்களை ஏற்பாடு செய்ய வேண்டும். தன்னார்வலர்களின் விவரங்களை முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும். 

12. பரப்புரையில் பிறர் மனம் புண்படுத்தும் வகையில் பிற ஜாதியினரை புண்படுத்தும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது. 

13. காவல்துறையினர் அனுமதிக்கும் வழித்தடத்தில் மட்டுமே பரப்புரைக்கு வருபவர்கள் வர வேண்டும் இதற்கு நிகழ்ச்சி ஏற்பாடுகள் பொறுப்பேற்க வேண்டும். 

14. பெட்டி வடிவு ஒலிபெருக்கியை மட்டுமே பயன்படுத்த வேண்டும் கூம்பு வடிவ ஒளிபரப்பியை பயன்படுத்தக் கூடாது. ஒலி அளவுப் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாத அளவு இருக்க வேண்டும். 

15. பொது மற்றும் தனியார் சொத்துக்கள் எவற்றுக்கும் சேதம் ஏற்படும் பட்சத்தில் அதற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை முழு பொறுப்பு ஏற்க வேண்டும். அப்படி சேதம் ஏற்படும் பட்சத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு சட்டம் ஒழுங்கு நிலைநிறுத்தப்படும் இதற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே பொறுப்பு. 

16. ஒன்றிய வாரியாக யாருடைய தலைமையில் எத்தனை வாகனங்களில் எவ்வளவு தொண்டர்கள் வருவார்கள் என்ற எண்ணிக்கையின் விபரமும் தலைமை தாங்கி அழைத்து வருபவர்களின் பிரதிநிதிகள் தொடர்பு என்னும் முன்கூட்டியே தெரிவிக்கப்பட வேண்டும். 

17. பரப்புரையில் நோட்டீஸ் மற்றும் துண்டுப் பிரசுரங்கள் எதுவும் விநியோகம் செய்யக் கூடாது. 

18. பரப்புரை முடிந்தவுடன் அமைதியான முறையில் தொண்டர்கள் கலைந்து செல்ல வேண்டும். 

19. உயர் நீதிமன்ற உத்தரவுப்படி தேசிய நெடுஞ்சாலை மற்ற சாலைகளில் இருபுறங்களிலும் பிளக்ஸ் பேனரோ அலங்கார வளைவுகளோ கொடி கட்டப்பட்ட கம்பிகளோ உரிய அனுமதி பெறாமல் வைக்க அனுமதி இல்லை. 

20. அரியலூர் பேருந்து நிலையத்தில் கட்டுமான பணி நடந்து வருவதாலும் அதனைச் சுற்றி அரசுப் பள்ளி நீதிமன்றம் வட்டாட்சியர் அலுவலகம் காவல் நிலையம் உள்ளிட்ட பொதுமக்கள் பயன்படுத்தும் அரசு அலுவலகங்கள் உள்ளதால் போக்குவரத்திற்கு எந்தவித இடையூறும் ஏற்படாத வண்ணம் ஏற்பட்டாளர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். 

21. அரியலூர் பழைய பேருந்து நிலையம் மற்றும் விஜய் பயண வழி பாதையில் பொது போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாத வண்ணம் நடந்து கொள்ள வேண்டும். 

22. விஜய் பயண வழி பாதையில் சாலைகளைப் பயன்படுத்தும் பொது மக்களுக்கும் பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவிகளுக்கும் பாதிப்பு ஏற்படாத வண்ணம் மருத்துவ சிகிச்சைக்காக நகருக்குள் வரும் ஆம்புலன்ஸ் மற்றும் ரயில் நிலையம் ஆகியவற்றிற்கு செல்லும் பொது மக்களுக்குப் பாதிப்பு ஏற்படாதவாறு கட்சியினர் நடந்து கொள்ள அறிவுறுத்த வேண்டும். 

23. மேற்கூறப்பட்ட நிபந்தனைகளுடன் காவல் அதிகாரிகளால் அவ்வப்போது வழங்கப்படும். அறிவுரைகளையும் பின்பற்றிப் பரப்புரை நடைபெறுவதை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உறுதி செய்ய வேண்டும். 

24. மேற்கூறிய நிபந்தனைகளில் மீறப்படும் பட்சத்தில் பரப்புரையை இடையிலேயே நிறுத்துவதற்கு காவல் துறையினருக்கு முழு அதிகாரம் உள்ளது. அதற்கான சட்டப்படியான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும். 

25. விஜய் மற்றும் ஐந்து வாகனங்களை அவருடன் வர அனுமதி. அவருக்குப் பின்னால் இருசக்கர வாகனங்களோ அல்லது வேறு வாகனங்களோ வர அனுமதி இல்லை.

என மொத்தம் 25 நிபந்தனைகளுடன் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள, அரியலூர் காவல் துணை கண்காணிப்பாளர் ரகுபதி அனுமதி அளித்துள்ளார்.

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks