விஜய் பயணத்திற்கு அனுமதி தரக்கூடாது - காவல் ஆணையரிடம் புகார்! Complaint Against Actor Vijay: Plea to Deny Permission for Chennai Tour

விஜய் பயணத்திற்கு அனுமதி தரக்கூடாது - காவல் ஆணையரிடம் புகார்! Complaint Against Actor Vijay: Plea to Deny Permission for Chennai Tour

திருச்சி பரப்புரையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல், பொதுமக்களின் சிரமம்; அதேபோல் சென்னையில் நடக்காமல் இருக்க சமூக ஆர்வலர் அன்சர் கோரிக்கை!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் சென்னை சுற்றுப்பயணத்திற்கு காவல்துறை அனுமதி அளிக்கக் கூடாது என்று கூறி, சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அன்சர் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அன்சர் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.  அந்தப் புகாரில், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்  சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காகக் காவல்துறையிடம் அனுமதி கேட்டு இருந்தார். இவரது சுற்றுப்பயணத்தால்  பொதுமக்கள் அன்றாட பணிகளையும் அத்தியாவசிய பணிகளை மேற்கொள்வது மிகவும் சிரமமாக ஏற்பட வாய்ப்புள்ளது. 

சென்னை மாநகரம் முழுவதும்  விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது  பல இன்னல்களைப் பொதுமக்கள் சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். பல மக்களின் அன்றாட வாழ்வாதாரம் மற்றும் அவசர ஊர்திகள் ஆம்புலன்ஸ் போன்ற அவசரகால செயல்பாடுகள் போக்குவரத்து நெரிசல்கள் மற்றும் பொது போக்குவரத்து  முடங்கிப் போகும் சூழ்நிலை உருவாகும்.

திருச்சி மாநகரில் தமிழக வெற்றி கழக தலைவர்  விஜய் சுற்றுப்பயணம் வந்த போது பொதுமக்களுக்கு எந்த ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்படவில்லை. அங்குப் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டது. பொது சொத்துக்கள் பல இடங்களிலும் சேதம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை மாநகரில் பல லட்சம் மக்கள் பிரபல நடிகரைக் காண்பதற்காகவும்  தமிழக வெற்றி  கழக தலைவர் விஜய்  நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர். விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இடங்களில் அதிகம் கூட்டம் கூடும் என்பதாலும் அங்கு ஆம்புலன்ஸ்கள் அவசர ஊர்திகள் மற்றும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்க வாய்ப்பு உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு  சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு அனுமதி காவல்துறை வழங்கக் கூடாது என்று புகார் மனுவில் அன்சர் தெரிவித்துள்ளார்.


கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks