கூலி படத்தின் மோனிகா பாடல் வீடியோ வெளியீடு - ரசிகர்கள் கொண்டாட்டம்! Monica Video Song from Coolie Released Goes Viral

கூலி படத்தின் மோனிகா பாடல் வீடியோ வெளியீடு - ரசிகர்கள் கொண்டாட்டம்! Monica Video Song from Coolie Released Goes Viral

ரஜினி - லோகேஷ் கூட்டணியில் வெளியான கூலி திரைப்படம்; ட்ரெண்டிங் பாடலை வெளியிட்ட படக்குழு!

2025-ம் ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகிப் பெரும் வெற்றி பெற்ற திரைப்படமான கூலி, தற்போது ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, மோனிகா பாடலின் வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான கூலி திரைப்படம், கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி உலகெங்கும் வெளியானது. தலைவர் 171 என்ற பெயரில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவான இந்தப் படத்தில், ரஜினிகாந்துடன் ஆமிர்கான், நாகார்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதி ஹாசன் உள்ளிட்டப் பல பிரபலங்கள் நடித்திருந்தனர்.

படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். அதில் ரசிகர்களை மிகவும் கவர்ந்த பாடல், நடிகை பூஜா ஹெக்டே சிறப்பு நடனமாடிய மோனிகா பாடல்தான். இந்தப் பாடல் திரையரங்கையே அதிர வைக்கும் அளவிற்கு பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது.

இந்தப் பாடல் குறித்துப் பல்வேறு வீடியோக்கள் மற்றும் ரீல்ஸ்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ட்ரெண்டிங்கிலிருந்து வந்தன. இந்நிலையில், ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று, படக்குழு தற்போது மோனிகா பாடலின் முழு வீடியோவையும் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks