உச்ச நீதிமன்றத்தின் அதிரடி பரிந்துரை: சென்னை ஐகோர்ட்டுக்கு நிரந்தர நீதிபதிகள்! Chennai High Court Permanent Judges: Collegium Recommendation

உச்ச நீதிமன்றத்தின் அதிரடி பரிந்துரை: சென்னை ஐகோர்ட்டுக்கு நிரந்தர நீதிபதிகள்! Chennai High Court Permanent Judges: Collegium Recommendation
கொலீஜியத்தின் தேர்வு: செந்தில்குமார், அருள்முருகனுக்கு உச்சக்கட்ட அங்கீகாரம்!


சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாகப் பணியாற்றி வந்த என்.செந்தில்குமார் மற்றும் ஜி.அருள்முருகன் ஆகியோரை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகள் கொண்ட கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. இந்த அதிரடி முடிவு, சட்டத்துறை வட்டாரங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

நீதிபதி என்.செந்தில்குமார், 1970ஆம் ஆண்டு பிறந்தவர். சேலம் மத்திய சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்து, 1994 இல் வழக்கறிஞராகப் பதிவு செய்தார்.

குற்றவியல் வழக்குகளில் திறம்பட வாதாடி தனக்கென ஒரு இடத்தைப் பிடித்த இவர், 2007 முதல் 2009 வரை தமிழ்நாடு அரசின் கூடுதல் அரசு பிளீடராகவும், பின்னர் மத்திய அரசு வழக்கறிஞராகவும் பணியாற்றி இருக்கிறார். கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் 16 ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாகப் பொறுப்பேற்றார்.

அதேபோல், தர்மபுரி மாவட்டம் அரூரைச் சேர்ந்த நீதிபதி ஜி.அருள்முருகன், 1976 ஆம் ஆண்டு பிறந்தவர். சேலம் மத்திய சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்து, 1999இல் வழக்கறிஞராகப் பதிவு செய்தார். மூத்த வழக்கறிஞர் கே.துரைசாமியிடம் பணிபுரிந்த இவர், பின்னர் சிவில் மற்றும் குற்றவியல் என அனைத்து வகை வழக்குகளிலும் வாதாடி அனுபவம் பெற்றவர். இவரும் கடந்த ஆண்டு உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாகப் பதவி ஏற்றது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks