Tamil Nadu Weather Report: தலைமுறை காணா பெருமழை: 19 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை: Heavy Rain Alert in 19 Districts of Tamil Nadu

Tamil Nadu Weather Report: தலைமுறை காணா பெருமழை: 19 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை: Heavy Rain Alert in 19 Districts of Tamil Nadu
தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உட்பட 19 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் இந்த மழைப்பொழிவு இருக்கும் எனக் கூறப்பட்டுள்ள நிலையில், ஒரே நேரத்தில் இத்தனை மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி, தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் மீது வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல், தெற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று மற்றும் நாளை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி, மதுரை, தேனி, திண்டுக்கல், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 19 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை சைதாப்பேட்டை மற்றும் ஒக்கியம் துரைப்பாக்கத்தில் 12 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

கனமழைக்கான எச்சரிக்கையைத் தொடர்ந்து, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை உஷார்படுத்தப்பட்டுள்ளது. மழை பாதிப்புகள் ஏற்பட்டால் உடனடியாக மீட்புப் பணிகளை மேற்கொள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

இதுகுறித்து வானிலை ஆய்வாளர் செல்வகுமார் கூறுகையில், வளிமண்டல சுழற்சியுடன், வடமேற்கு வெப்பக் காற்றும், நீராவி குவிதலும் இணைந்து செயல்படுவதால் தமிழகத்தில் பரவலாக கனமழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக, இன்று மாலை வேளைகளில் மழையின் தீவிரம் அதிகரிக்கக்கூடும். நீலகிரியில் தொடங்கி மேற்கு மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் என மழை அடுத்தடுத்த பகுதிகளில் பரவ வாய்ப்புள்ளது என்றார். இந்த சீசனில் மீனவர்கள் மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks