பாகுபலிக்கு நிகராக பிரம்மாண்டம்.. காந்தாரா சாப்டர் 1-ன் டப்பிங் பணிகள் நிறைவு! Kantara Chapter 1: Rukmini Vasanth Finishes Dubbing

பாகுபலிக்கு நிகராக பிரம்மாண்டம்.. காந்தாரா சாப்டர் 1-ன் டப்பிங் பணிகள் நிறைவு! Kantara Chapter 1: Rukmini Vasanth Finishes Dubbing
கனகவதியாக உருவெடுக்கும் ருக்மணி வசந்த்... படக்குழுவின் அசத்தல் அப்டேட்!

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகி வரும் 'காந்தாரா: சாப்டர் 1' திரைப்படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. படத்தின் கதாநாயகி ருக்மணி வசந்த், தனது டப்பிங் பணிகளை நிறைவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு, காந்தாரா ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தைக் கிளப்பியுள்ளது.

ரிஷப் ஷெட்டி எழுதி, இயக்கி, நடித்த 'காந்தாரா' திரைப்படம் கடந்த 2022ஆம் ஆண்டு வெளியாகி உலக அளவில் மாபெரும் வெற்றியைப் பெற்றது. அதன் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகமான 'காந்தாரா: சாப்டர் 1' தற்போது தயாராகி வருகிறது. ஹொம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம், 7 இந்திய மொழிகளில் வரும் அக்டோபர் 2ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், படத்தில் கனகவதி எனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை ருக்மணி வசந்த், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தான் டப்பிங் பணிகளை முடித்துவிட்டதாகப் பதிவிட்டுள்ளார். 

இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ருக்மணி வசந்த் கதாபாத்திரம் குறித்து அதிக தகவல்கள் வெளியாகாத நிலையில், அவர் காந்தாரா முதல் பாகத்தில் நடித்த சப்தமி கவுடாவுக்கு இணையாக வலுவான கதாபாத்திரத்தில் இருப்பார் என சினிமா வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன.

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks