மாமூல் கேட்டு மிரட்டல்: மளிகைக் கடை உரிமையாளர் மற்றும் மனைவி மீது கொடூரத் தாக்குதல்! Chennai Shocker: Couple attacked by a gang over extortion demand

மாமூல் கேட்டு மிரட்டல்: மளிகைக் கடை உரிமையாளர் மற்றும் மனைவி மீது கொடூரத் தாக்குதல்! Chennai Shocker: Couple attacked by a gang over extortion demand

பூட்டை வைத்தே கணவரைத் தாக்கிய கும்பல்... தடுக்க வந்த மனைவியையும் கத்தியால் வெறித்தனமாக வெட்டிய கொடூரர்கள்!

சென்னை, முகப்பேர் பகுதியில் மாமூல் தர மறுத்த மளிகைக் கடை உரிமையாளர் மற்றும் அவரது மனைவி மீது, ஆயுதங்களால் கொடூரத் தாக்குதல் நடத்திய கும்பல் ஒன்று தப்பியோடியுள்ளது. பாதிக்கப்பட்ட தம்பதியினர் ரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாடி கலைவாணர் நகரில் மளிகைக் கடை நடத்தி வரும் வேல்முருகன் மற்றும் அவரது மனைவி, நேற்று இரவு கடையை மூடிக் கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத நான்கு பேர் கொண்ட கும்பல் ஒன்று அங்கு வந்துள்ளது. அந்தக் கும்பல், மாதந்தோறும் தங்களுக்கு ரூ. 5 ஆயிரம் மாமூல் தர வேண்டும் என வேல்முருகனை மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதற்கு அவர் மறுப்பு தெரிவிக்கவே, ஆத்திரமடைந்த அந்தக் கும்பல், கடையின் பூட்டை வைத்தே வேல்முருகனை சரமாரியாகத் தாக்கியுள்ளது. கணவரைத் தடுக்க வந்த அவரது மனைவியையும் கத்தியால் வெறித்தனமாகத் தாக்கிவிட்டு, அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பியோடியது.

ரத்தக் காயங்களுடன் உயிருக்குப் போராடிய தம்பதியினரை மீட்ட அப்பகுதி மக்கள், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஜெ.ஜெ. நகர் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துவரும் போலீசார், சந்தேகத்தின் பேரில் ஒருவரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks