டிரான்ஸ்பார்மர் கொள்முதல் முறைகேடு வழக்கு: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிக்கல்! Rs 397 crore scam case against Senthil Balaji adjourned to October 15

₹397 கோடி முறைகேடு தொடர்பாக வழக்கு: உயர் நீதிமன்றம் அக்டோபர் 15-க்கு ஒத்திவைப்பு!


தமிழகத்தில் டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் ₹397 கோடி முறைகேடு நடந்ததாக, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிராக வழக்கு பதியக் கோரிய மனு மீதான இறுதி விசாரணையை, சென்னை உயர் நீதிமன்றம் அக்டோபர் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

வழக்கின் பின்னணி:

* 2021-23-ஆம் ஆண்டுகளுக்கு இடையில், 45,800 டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ய ₹1,182.88 கோடிக்கு டெண்டர் கோரப்பட்டது.

* இந்த டெண்டர் ஆவணங்களை ஆய்வு செய்ததில், ஒப்பந்ததாரர்கள் லாபமடையும் வகையில் டெண்டர் வழங்கப்பட்டதால் அரசுக்கு ₹397 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

* இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறையில் அளித்த புகாரின் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக் கோரி, அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த முறைகேட்டில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, டான்ஜெட்கோ தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ராஜேஷ் லக்கானி உள்ளிட்டோருக்கு எதிராக ஆதாரங்கள் உள்ளதால், உயர் நீதிமன்றக் கண்காணிப்பில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி என். சதீஷ்குமார், இறுதி விசாரணையை அக்டோபர் 15-ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

Durex Condoms

நீங்கள் நம்பும் பாதுகாப்ப - இப்போதே வாங்குங்கள்!