அதிமுகவில் அடுத்தடுத்து மாற்றங்கள்! - எடப்பாடி பழனிசாமி திடீர் அறிவிப்பு: 4 நிர்வாகிகள் பதவி நீக்கம்! EPS Removes Four AIADMK Office-Bearers in Erode

அதிமுகவில் அடுத்தடுத்து மாற்றங்கள்! - எடப்பாடி பழனிசாமி திடீர் அறிவிப்பு: 4 நிர்வாகிகள் பதவி நீக்கம்!  EPS Removes Four AIADMK Office-Bearers in Erode

ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் மீது அதிரடி நடவடிக்கை; தலைமைக்கழச் செய்திக்குறிப்பு வெளியீடு!



அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி K. பழனிசாமி அவர்கள், ஒரே நாளில் அடுத்தடுத்து வெளியிட்ட அதிரடி அறிவிப்புகளால், கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு முக்கிய நிர்வாகிகளை அவர்கள் வகித்து வந்த பொறுப்புகளிலிருந்து விடுவித்து, அவர் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

கழகத் தலைமையிலிருந்து வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம், அம்மாபேட்டை மேற்கு ஒன்றியக் கழகச் செயலாளர் திரு. S. செல்வன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர் திரு. அருள் ராமச்சந்திரன், மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் செயலாளர் திரு. A.V.M. செந்தில் (எ) கோடீஸ்வரன், மற்றும் சத்தியமங்கலம் நகர புரட்சித் தலைவி பேரவை இணைச் செயலாளர் திரு. S.D. காமேஷ் ஆகியோர் அவரவர் வகித்து வந்த பொறுப்புகளில் இருந்து இன்று முதல் விடுவிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கழகக் கட்டுப்பாட்டை நிலைநிறுத்தும் விதமாக, எடப்பாடி பழனிசாமி எடுத்துள்ள இந்த நடவடிக்கை, கட்சிக்குள் அவர் தனது பிடியை மேலும் இறுக்குவதைக் காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஒரே நாளில் பல்வேறு நிர்வாகிகளின் மீது எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை, கட்சியில் புதிய சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது.




கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks