அதிமுகவில் அடுத்த அதிரடி! கழகக் கட்டுப்பாட்டை மீறிய இருவர் நீக்கம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! EPS Expels Two Party Members for Indiscipline Erode and Kallakurichi

அதிமுகவில் அடுத்த அதிரடி! கழகக் கட்டுப்பாட்டை மீறிய இருவர் நீக்கம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! EPS Expels Two Party Members for Indiscipline Erode and Kallakurichi

ஈரோடு மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் நீக்கம்; தொண்டர்கள் தொடர்பில் இருக்கக் கூடாது என எச்சரிக்கை!


அதிமுகவின் பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான புரட்சித் தமிழர்' எடப்பாடி K. பழனிசாமி அவர்கள், கழகக் கட்டுப்பாட்டை மீறிச் செயல்பட்ட இரு முக்கிய நிர்வாகிகளை அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

கழகத் தலைமை அலுவலகத்திலிருந்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த திரு. மருதமுத்து (முன்னாள் துணைச் செயலாளர்) மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த திரு. இரா.மா. மணிகண்டன் (மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு துணைத் தலைவர்) ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணாகச் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படுத்தும் விதத்தில் நடந்துகொண்டதாலும் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கட்சிக்குக் களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் வகையில் செயல்பட்ட இந்த இருவருடன், கழக உடன்பிறப்புகள் யாரும் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது எனவும் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார். இந்த நடவடிக்கை, கட்சியில் கட்டுப்பாட்டை நிலைநிறுத்துவதில் பழனிசாமியின் உறுதியைக் காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.


கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks