ஏத்தாப்பூர் போலீசார் அதிரடி நடவடிக்கை; 40க்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் பறிமுதல்!
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே அரசு மதுபானங்களை சட்டவிரோதமாகக் கள்ளச்சந்தையில் விற்பனை செய்த நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஏத்தாப்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்யப்படுவதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், ஏத்தாப்பூர் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இந்தச் சோதனையில், வெள்ளாளப்பட்டி, ஆரியபாளையம், உமையாள்புரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சித்ரா (67), மணி (59), செல்வம், மற்றும் முருகன் ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 40க்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.