கட்டுப்பாட்டை இழந்த கார் கவிழ்ந்தது; அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுநர்!
சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே 10 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
சேலம், பள்ளப்பட்டி பகுதியைச் சேர்ந்த வைரவேல் (21), நேற்று சென்னையைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளை ஏற்காட்டிற்கு அழைத்துச் சென்றார். நாகலூர் அருகே தனியார் விடுதியில் அவர்களை இறக்கிவிட்டு சேலத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, நாகலூர் மரப்பாலம் பகுதியில் கார் கட்டுப்பாட்டை இழந்தது.
கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் இருந்த சுமார் 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஓட்டுநர் வைரவேல் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஏற்காடு போலீசார், ஓட்டுநரை மீட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.