கோவை: 15 வயது சிறுமிக்குப் பாலியல் வன்கொடுமை; வாலிபர் மற்றும் அத்தை கைது! Sexual Assault of a 15-Year-Old Girl Youth and Aunt Arrested in Coimbatore POCSO Case

கோவை: 15 வயது சிறுமிக்குப் பாலியல் வன்கொடுமை; வாலிபர் மற்றும் அத்தை கைது!  Sexual Assault of a 15-Year-Old Girl Youth and Aunt Arrested in Coimbatore POCSO Case

பிசியோதெரபி செய்வதாகக் கூறி மிரட்டி வன்கொடுமை; போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு!

கோவையில் 15 வயது மாணவிக்கு மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, வாலிபர் மற்றும் அந்த மாணவியின் அத்தை என இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது கல்லூரி முதலாம் ஆண்டு படித்துவரும் அந்த மாணவி, கடந்த 2022-ஆம் ஆண்டு தனது அத்தை வீட்டிற்குச் சென்றபோது, சாகின் என்ற இளைஞர் பிசியோதெரபி மசாஜ் செய்வதாகக் கூறி மிரட்டிப் பாலியல் வன்கொடுமை செய்ததாகத் தெரிவித்துள்ளார். அதன் பின்னர், தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்ததாகவும் மாணவி தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில், கோவை தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், சாகின் மற்றும் அந்த மாணவியின் அத்தை மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். முதலில் அத்தையைக் கைது செய்த போலீசார், தற்போது சாகினையும் கைது செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks