20%க்கு மேல் எத்தனால் கலப்பு இல்லை: அரசு உறுதியான நிலைப்பாட்டில் இல்லை - பெட்ரோலியத் துறை அமைச்சர் அறிவிப்பு! No Decision on Increasing Ethanol Blending Above 20%

20%க்கு மேல் எத்தனால் கலப்பு இல்லை: அரசு உறுதியான நிலைப்பாட்டில் இல்லை - பெட்ரோலியத் துறை அமைச்சர் அறிவிப்பு! No Decision on Increasing Ethanol Blending Above 20%
பெட்ரோலில் எத்தனால் கலப்பு: 20%க்கு மேல் அதிகரிக்க முடிவில்லை!


பெட்ரோலுடன் எத்தனால் கலக்கும் அளவை 20%க்கு மேல் அதிகரிப்பது குறித்து ஒன்றிய அரசு இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். அரசின் இந்த நிலைப்பாடு, எரிபொருள் கொள்கை குறித்த விவாதங்களுக்கு வழிவகுத்துள்ளது.

முன்னதாக, இந்தியா 2025ஆம் ஆண்டிற்குள் பெட்ரோலுடன் 20% எத்தனாலைக் கலக்கும் இலக்கை அடைய வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த இலக்கு, தற்போது திட்டமிடப்பட்ட காலத்திற்கு முன்னதாகவே அடையப்பட்டு விட்டது. இந்நிலையில், பெட்ரோலில் எத்தனால் கலக்கும் விகிதத்தை மேலும் அதிகரிக்கும் திட்டம் குறித்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்குப் பதிலளித்த அவர், பெட்ரோலில் எத்தனால் கலப்பை 20%க்கு மேல் அதிகரிப்பது குறித்து அரசு இதுவரை எந்தவித முடிவும் எடுக்கவில்லை. இந்த விஷயம் குறித்து விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். வாகனங்களின் பயன்பாடும், அவற்றின் என்ஜின் தொழில்நுட்பமும் இந்த மாற்றம் குறித்து கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என்றார்.

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks