நள்ளிரவில் கொட்டித் தீர்த்த கனமழை: மராட்டியத்தில் ஒரே நாளில் 3 பேர் பலி! Heavy Rain in Maharashtra: 3 Dead in a Single Day

நள்ளிரவில் கொட்டித் தீர்த்த கனமழை: மராட்டியத்தில் ஒரே நாளில் 3 பேர் பலி! Heavy Rain in Maharashtra: 3 Dead in a Single Day
வெள்ளத்தில் மூழ்கிய தாழ்வான பகுதிகள்... மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!


மராட்டிய மாநிலத்தின் மராத்வாடா மற்றும் விதர்பா பகுதிகளில் நேற்று முன்தினம் கொட்டித் தீர்த்த கனமழையால், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கின. மழை தொடர்பான சம்பவங்களில் ஒரே நாளில் மூன்று பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து மாநில நிர்வாகம் தீவிரமாக கண்காணித்து வருகிறது.

மராத்வாடாவில் உள்ள எட்டு மாவட்டங்களில் பெய்த கனமழையில், பீட் மாவட்டத்தில் மட்டும் அதிகபட்சமாக 14 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனால், அங்குள்ள ஆறுகள் பெருக்கெடுத்து ஓடி, பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், பீட் மாவட்டத்தில் மழை தொடர்பான சம்பவங்களில் இரண்டு பேரும், நாக்பூரில் ஒருவரும் என மொத்தம் மூன்று பேர் உயிரிழந்தனர். வெள்ளத்தில் சிக்கிய 120-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு, பாதுகாப்பான நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அவசரகால நிவாரணப் பணிகளில் மத்திய பேரிடர் மீட்பு படையின் (NDRF) 12 குழுக்கள் உள்பட பல்வேறு மீட்புக் குழுக்கள் களமிறங்கியுள்ளன. மராத்வாடா மற்றும் விதர்பாவின் சில பகுதிகளில் ஆறுகள் மற்றும் நீர்நிலைகள் நிரம்பி வழிவதால், மாநில நிர்வாகம் அதனைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks