கேரளா ஆற்றில் மூழ்கி கோவை மாணவர்கள் இருவர் பரிதாப பலி.. மாணவர்கள் உயிரை பறித்த செல்பி மோகம்!Two Coimbatore College Students Drown in Kerala's Chittoor River

கேரளா ஆற்றில் மூழ்கி கோவை மாணவர்கள் இருவர் பரிதாப பலி.. மாணவர்கள் உயிரை பறித்த செல்பி மோகம்!Two Coimbatore College Students Drown in Kerala's Chittoor River
கேரளா ஆற்றில் மூழ்கி கோவை மாணவர்கள் இருவர் பரிதாப பலி.. மாணவர்கள் உயிரை பறித்த செல்பி மோகம்!

கோவையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பயின்று வந்த மாணவர்கள் இருவர், கேரள மாநிலம் சித்தூர் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆற்றுப் பாலத்தின் அருகே உள்ள தடுப்பணையில் ஆபத்தான பகுதியில் குளிக்க வேண்டாம் என உள்ளூர் மக்கள் எச்சரித்தும், அதைப் புறக்கணித்த மாணவர்கள் ஆற்றில் இறங்கியதாக நேரில் கண்டவர்கள் கூறியுள்ளனர்.

கோவையில் இருந்து சுற்றுலா சென்ற 10 பேர் கொண்ட மாணவர் குழு, பாலக்காடு அருகே உள்ள சித்தூர் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கிருந்த தடுப்பணையில் இருந்த துளை வழியாக அருண்குமார் மற்றும் ஸ்ரீகவுதம் இருவரும் எதிர்பாராதவிதமாக நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். உடனடியாக, அருகிலிருந்தவர்கள் அளித்த தகவலின் பேரில், தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் விரைந்து வந்து ஸ்ரீகவுதமை மீட்டனர். ஆனால், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

இந்நிலையில், நீரில் அடித்துச் செல்லப்பட்ட மற்றொரு மாணவரான அருண்குமாரைத் தேடி வந்த மீட்பு குழுவினர், ஸ்கூபா வீரர்களின் உதவியுடன் தேடுதல் வேட்டையைத் தொடர்ந்தனர். 

ஆற்றுப் பாலத்திற்குள் அருணின் உடல் சிக்கியிருப்பதை உள்ளூர்வாசி ஒருவர் கண்டறிந்து தகவல் அளிக்க, சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் "பெரும் போராட்டத்திற்குப் பின்னர் அருண்குமாரின் உடலை மீட்டனர். கடந்த காலங்களில் இங்கு பல விபத்துகள் நடந்துள்ள நிலையில், மாணவர்கள் ஆபத்து நிறைந்த பகுதிகளில் செல்பி மற்றும் போட்டோ எடுக்கும் ஆர்வத்தில் உள்ளூர் மக்களின் எச்சரிக்கையை புறக்கணித்ததுதான் இந்த விபரீதத்திற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது. நாளை, பாலக்காடு மாவட்ட மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்குப் பின் இருவரின் உடல்களும் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும்.





புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks