கேரள பள்ளிகளில் புகார் பெட்டி: குழந்தைகள் பாதுகாப்புக்கு புதிய திட்டம்!

கேரள பள்ளிகளில் புகார் பெட்டி: குழந்தைகள் பாதுகாப்புக்கு புதிய திட்டம்!

கேரள பள்ளிகளில் புகார் பெட்டி: குழந்தைகள் பாதுகாப்புக்கு புதிய திட்டம்!

கேரளாவில் குழந்தைகள்மீதான கொடூரத் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், குழந்தைகளைப் பாதுகாப்பதற்காகப் பள்ளிகளில் 'சுரக்ஷா மித்ரம்' என்ற புகார் உதவிப் பெட்டிகள் அமைக்கப்படும் எனக் கேரள கல்வி அமைச்சர் சிவன்குட்டி  அதிரடியாக அறிவித்துள்ளார். 

சமீபத்தில் ஆலப்புழாவில் 9 வயது சிறுமி தனது தந்தை மற்றும் மாற்றாந்தாயால் தாக்கப்பட்ட சம்பவம், மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த முக்கியத் திட்டம் தொடங்கப்படவுள்ளது.

ஆலப்புழாவில் பள்ளிக்கு வந்த 9 வயது சிறுமியின் கன்னத்தில் காயங்கள் இருந்ததைக் கண்ட பள்ளியின் தலைமை ஆசிரியர், இதுகுறித்து விசாரித்தபோது, அவளது தந்தை மற்றும் மாற்றாந்தாய் இருவரும் சேர்ந்து தாக்கியது தெரியவந்தது. உடனடியாக அவர் அளித்த புகாரின் பேரில், குழந்தைகள் நல அதிகாரி விசாரணை நடத்தி, போலீசில் தகவல் அளித்தார். இதனையடுத்து, சிறுமியின் தந்தை மற்றும் மாற்றாந்தாய் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் சிவன்குட்டி, வீட்டில் துன்புறுத்தல்களை எதிர்கொள்ளும் குழந்தைகள் ரகசியமாகப் புகார் அளிக்க ஏதுவாக, அனைத்துப் பள்ளிகளிலும் 'சுரக்ஷா மித்ரம்' புகார் உதவிப் பெட்டிகள் அமைக்கப்படும் எனத் தெரிவித்தார். இந்தப் பெட்டியில் புகார் அளிக்கும் குழந்தைகள் தங்கள் பெயரை எழுத வேண்டிய அவசியமில்லை. 

ஒவ்வொரு வாரமும் தலைமை ஆசிரியர் இந்தப் பெட்டியைச் சரிபார்த்து, கடுமையான புகார்களாக இருந்தால் உடனடியாக அரசுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். கடந்த 10 ஆண்டுகளில் வன்முறையால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் 43 ஆயிரத்துக்கும் அதிகம் என்ற அதிர்ச்சிப் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks