ஸ்விகி (Swiggy's) வாடிக்கையாளர்கள் 'ஷாக்'.. பிளாட்ஃபார்ம் கட்டணம் ரூ.14 ஆக உயர்வு!

ஸ்விகி (Swiggy's) வாடிக்கையாளர்கள் 'ஷாக்'.. பிளாட்ஃபார்ம் கட்டணம் ரூ.14 ஆக உயர்வு!

ஸ்விகி (Swiggy's) வாடிக்கையாளர்கள் 'ஷாக்'.. பிளாட்ஃபார்ம் கட்டணம் ரூ.14 ஆக உயர்வு!


ஆன்லைன் உணவு டெலிவரி ஆர்டருக்கான பிளாட்ஃபார்ம் கட்டணத்தை மீண்டும் ரூ.2  ஸ்விகி நிறுவனம் உயர்த்தியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2023 ஏப்ரலில் ரூ.2 ஆக இருந்த இக்கட்டணம், 2024 அக்டோபரில் ரூ.10 ஆகவும், தற்போது ரூ.14-ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 

ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விகி, தனது வாடிக்கையாளர்களுக்கான 'பிளாட்ஃபார்ம்' கட்டணத்தை மீண்டும் உயர்த்தியுள்ளது. இந்தக் கட்டண உயர்வு, பயனர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

புதிய அறிவிப்பின்படி, ஒவ்வொரு ஆன்லைன் உணவு ஆர்டருக்கும் விதிக்கப்படும் பிளாட்ஃபார்ம் கட்டணம் ரூ.12-லிருந்து ரூ.14-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 2023-ஆம் ஆண்டு ஏப்ரலில் இந்தக் கட்டணம் ரூ.2-ஆக அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர், 2024 அக்டோபரில் ரூ.10-ஆக உயர்த்தப்பட்டது. தற்போது, மீண்டும் ஒருமுறை உயர்த்தப்பட்டு ரூ.14-ஐ எட்டியுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும், ஸ்விகியின் பிளாட்ஃபார்ம் கட்டணம் 600 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன் மூலம், வாடிக்கையாளர்கள் உணவுக்கான கட்டணம், ஜிஎஸ்டி மற்றும் டெலிவரி கட்டணத்துடன், இந்தக் கூடுதல் தொகையையும் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்தத் தொடர் கட்டண உயர்வு, நுகர்வோர் மத்தியில் பெரும் விமர்சனங்களைக் கிளப்பியுள்ளது.




புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks