ஐயப்பன் கோயில் நடை திறப்பு: ஆனி மாத பூஜைகள் தொடக்கம்!

ஐயப்பன் கோயில் நடை திறப்பு: ஆனி மாத பூஜைகள் தொடக்கம்!

ஐயப்பன் கோயில் நடை திறப்பு: ஆனி மாத பூஜைகள் தொடக்கம்!

தமிழ் மாதமான ஆனி, மலையாள மாதமான சிங்ஙம் மாத பூஜைகளுக்காகக் கோயில் நடை திறக்கப்பட்டு, வரும் ஆகஸ்ட் 21 வரை நடை திறந்திருக்கும் என்று தேவஸ்வம் போர்டு அறிவித்துள்ளது.

பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் நடை, தமிழ் மாதமான ஆனி மற்றும் மலையாள மாதமான சிங்ஙம் மாத பூஜைகளுக்காக இன்று (ஆகஸ்ட் 16) மாலை திறக்கப்படுகிறது. இதனால், நாடு முழுவதும் உள்ள ஐயப்ப பக்தர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

மாதாந்திர பூஜைகளுக்காக, இன்று மாலை 5 மணிக்குச் சபரிமலை கோயில் நடை திறக்கப்பட உள்ளது. ஆகஸ்ட் 21-ஆம் தேதிவரை நடை திறந்திருக்கும் எனவும், அதன் பிறகு மீண்டும் அடைக்கப்படும் எனவும் தேவஸ்வம் போர்டு அறிவித்துள்ளது.

சபரிமலைக்கு வரும் பக்தர்கள், முன்பதிவு செய்து தரிசனம் செய்யலாம். பக்தர்கள் sabarimalaonline.org.in என்ற இணையதளம் மூலம் தங்களின் தரிசனத்திற்கான முன்பதிவை உறுதிசெய்து கொள்ளலாம்.

பக்தர்களின் வசதிக்காக ஆன்லைன் முன்பதிவு முறை அமலில் இருப்பதால், ஐயப்பனை தரிசிக்க வரும் பக்தர்கள் இந்த முறையைப் பயன்படுத்தி சிரமமின்றி தரிசனம் செய்யலாமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks