கிளாம்பாக்கம் ஆம்னி பேருந்து: RTO சோதனையில் ரூ.1.26 லட்சம் அபராதம்!

கிளாம்பாக்கம் ஆம்னி பேருந்து: RTO சோதனையில் ரூ.1.26 லட்சம் அபராதம்!

கிளாம்பாக்கம் ஆம்னி பேருந்து: RTO சோதனையில் ரூ.1.26 லட்சம் அபராதம்!

தொடர் விடுமுறை காரணமாக ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்ததாகத் தொடர் புகார்கள் வந்ததையடுத்து, வட்டார அலுவலக அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

சென்னையின் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில், பயணிகளிடம் ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக வந்த தொடர் புகாரையடுத்து, போக்குவரத்து வட்டார அலுவலக அதிகாரிகள் (RTO) அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

சுற்றுலாப் பயணிகள் மற்றும் விடுமுறை காலங்களில், ஆம்னி பேருந்துகள் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட அதிக தொகையை வசூலிப்பதாகப் புகார்கள் வலுத்து வந்தன. இதன் அடிப்படையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்னி பேருந்துகளை ஆர்.டி.ஓ அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்தனர்.

இந்தச் சோதனையில், பயணிகளிடமிருந்து அதிக கட்டணம் வசூலித்த 18 ஆம்னி பேருந்துகள் கண்டறியப்பட்டன. இதனையடுத்து, விதிகளை மீறிச் செயல்பட்ட அந்த 18 வாகனங்களுக்கும் மொத்தமாக ரூ.1.26 லட்சம் அபராதம் விதித்து அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுத்தனர்.

மேலும், பயணிகளிடமிருந்து வசூலிக்கப்பட்ட கூடுதல் தொகையும், அதே பயணிகளிடமே உடனடியாகத் திருப்பி அளிக்கப்பட்டது. பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையைப் பொதுமக்கள் வரவேற்றுள்ளனர். அதிக கட்டணம் வசூலிப்பவர்கள் மீது தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் எனப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks