நாகலாந்து கவர்னர் இல.கணேசன் காலமானார்!

நாகலாந்து கவர்னர் இல.கணேசன் காலமானார்!

நாகலாந்து கவர்னர் இல.கணேசன் காலமானார்!


நாகாலாந்து மாநில ஆளுநர் இல. கணேசன், கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நாகாலாந்து மாநில ஆளுநர் இல. கணேசன், சென்னையில் உள்ள தனது இல்லத்தில் கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆகஸ்ட் 8 ஆம் தேதி காலைச் சென்னை, தி.நகர், வெங்கட் நாராயணா சாலையில் உள்ள தனது இல்லத்தில் இல. கணேசன் எதிர்பாராதவிதமாக மயங்கி விழுந்துள்ளார். அப்போது அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், உடனடியாக அவர் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) சேர்க்கப்பட்டார்.

சர்க்கரை அளவு அதிகமானதால் கொளத்தூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, கடந்த 8 ஆம் தேதி தான் அவர் வீட்டிற்குத் திரும்பியுள்ளார். இந்த நிலையில், இந்த எதிர்பாராத விபத்து நடந்தது.

செப்டம்பர் 2022 முதல் நாகாலாந்து மாநில ஆளுநராகப் பதவி வகித்து வரும் இல. கணேசன், இதற்கு முன் மணிப்பூர் மாநில ஆளுநராகவும், மேற்கு வங்கத்தின் தற்காலிக ஆளுநராகவும் பணியாற்றியுள்ளார். மருத்துவக் குழு அவருக்குத் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று மாலை உயிரிழந்தார்.

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks