விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்: சிலை கரைக்கும் இடங்கள்: போக்குவரத்து விதிமுறைகள் அறிவிப்பு!
தமிழகம் முழுவதும் கடந்த 27 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து வரும் ஆகஸ்ட் 31, 2025 அன்று நடைபெறவுள்ள விநாயகர் சதுர்த்தி சிலை ஊர்வலத்தை முன்னிட்டு, சென்னையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டு, ஏராளமான விநாயகர் சிலைகள் கடற்கரை பகுதிகளில் உள்ள நான்கு முக்கிய இடங்களுக்குக் கொண்டு செல்லப்படவுள்ளன. அவை:
ஶ்ரீனிவாசபுரம் - மயிலாப்பூர்
பல்கலை நகர் - திருவான்மியூர்
N 4 மீன்பிடித் துறைமுகம் - புது வண்ணாரப்பேட்டை
பாப்புலர் எடை மேடை - திருவெற்றியூர்
முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றங்கள்:
விநாயகர் சிலைகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மற்றும் பாதசாரிகளின் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், போக்குவரத்தை சீர்செய்யப் பின்வரும் ஏற்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன:
காந்தி சிலை, ஆர்.கே. சாலை சந்திப்பிலிருந்து வருபவர்கள்: இந்த வழித்தடத்தில் வாகனப் போக்குவரத்து மெதுவாக இருப்பதால், வாகனங்கள் மாற்று வழியில் திருப்பி விடப்படும். அவை வி.எம். தெரு, லஸ் ஜங்ஷன், அமிர்தாஞ்சன் சந்திப்பு, டிசில்வா சாலை, வாரன் சாலை, டாக்டர் ரங்கா சாலை, பீமண்ண கார்டன் சந்திப்பு, சி.பி. ராமசாமி சாலை, செயிண்ட் மேரிஸ் சந்திப்பு, காளியப்பா சந்திப்பு, ஸ்ரீனிவாசா அவென்யூ வழியாகச் சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
அடையாறிலிருந்து வருபவர்கள்: சாந்தோம் நெடுஞ்சாலை நோக்கி வரும் வாகனங்கள் ஆர்.கே. மடம் சாலை, திருவேங்கடம் தெரு, வி.கே. ஐயர் சாலை சந்திப்பு, தேவநாதன் தெரு, செயிண்ட் மேரிஸ் சாலை, ஆர்.கே. மடம் சாலை, தெற்கு மாட சந்திப்பு, வெங்கடேச அக்ரஹாரம் சாலை, கிழக்கு அபிராமபுரம், லஸ் அவென்யூ, பி.எஸ். சிவசாமி சாலை, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, மற்றும் டாக்டர் ஆர்.கே. சாலை வழியாகச் செல்லலாம்.
ரத்னா கஃபே சந்திப்பு: சிலை ஊர்வலம் இந்த சந்திப்பைக் கடக்கும்போது, ஜாம் பஜார் காவல் நிலையத்திலிருந்து ரத்னா கஃபே சந்திப்பு நோக்கி வரும் வாகனங்கள் அனுமதிக்கப்படாது. அவை ஜானி ஜான்கான் சாலை வழியாகத் திருப்பி விடப்படும்.
திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை: ஊர்வலம் கடக்கும்போது, ஐஸ் ஹவுஸ் சந்திப்பிலிருந்து ரத்னா கஃபே சந்திப்பு நோக்கி வரும் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது. அவை பெசன்ட் சாலை - காமராஜர் சாலை வழியாக அல்லது இடதுபுறம் GRH சந்திப்பை நோக்கித் திருப்பி விடப்படும்.
லூப் சாலை: கலங்கரை விளக்கத்திலிருந்து ஶ்ரீனிவாசபுரம் சிலை கரைக்கும் இடத்திற்குச் சிலை கொண்டுவரும் வாகனங்கள் மட்டுமே லூப் சாலை வழியாக அனுமதிக்கப்படும்.
வணிக வாகனங்களுக்குத் தடை: சிலை கரைக்கும் இடங்களைச் சுற்றி சுமார் 10 கி.மீ சுற்றளவிற்கு எந்தவிதமான வணிக வாகனங்களும் செல்ல அனுமதி இல்லை.
பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் போக்குவரத்து போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
in
தமிழகம்