சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு தொடங்கி இன்று அதிகாலை வரை கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கி நின்றதோடு, போக்குவரத்திலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை மழைப்பதிவுகள்:
மணலியில் மட்டும் 27 செ.மீ. மழை பதிவாகி, இது தற்போதைய மழைக்காலத்தில் சென்னை சந்தித்த மிகப்பெரிய மழையாகும். மற்ற பகுதிகளில்:
விம்கோ நகர் – 23 செ.மீ.
கொரட்டூர் – 18 செ.மீ.
கத்திவாக்கம் – 14 செ.மீ.
திருவொற்றியூர் – 13 செ.மீ.
கொடுங்கையூர் – 13 செ.மீ.
பல்லாவரம் – 12 செ.மீ.
தியாகராய நகர் – 12 செ.மீ.
சென்னையில் நேற்று பெய்த மழை குறித்து வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
முதல்முறையாக மேகவெடிப்பு:
தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறியதாவது:
"இந்த ஆண்டில் சென்னையில் முதல்முறையாக மேகவெடிப்பு (Cloudburst) ஏற்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்திற்குள் 10 செ.மீ. மழை பெய்தது என்பது அதற்கான உறுதியான சான்றாகும்," எனத் தெரிவித்தார்.
பொதுமக்களுக்கு எச்சரிக்கை:
தாழ்வான பகுதிகளில் நீர் தேக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் அவதானமாக செயல்பட வேண்டும். அவசர தேவையின்றி வீடுகளிலேயே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.