மீண்டும் டிக்டாக்? இந்தியாவில் ஊழியர்களைப் பணியமர்த்தத் தொடங்கியது டிக்டாக் நிறுவனம்!
இந்தியாவில் தடை நீக்கப்படாத நிலையில், புதிய பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டது டிக்டாக்!
இந்தியாவில் டிக்டாக் (TikTok) செயலி மீதான தடை இன்னும் நீக்கப்படாத நிலையில், அந்த நிறுவனம் மீண்டும் இந்திய ஊழியர்களைப் பணியமர்த்தத் தொடங்கியுள்ளது. இது இந்தியாவில் டிக்டாக் மீண்டும் வரவிருக்கின்றதா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
டிக்டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படவில்லை என ஒன்றிய அரசு சமீபத்தில் தெரிவித்திருந்தது. இந்நிலையில், டிக்டாக் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்புப் பக்கமான லிங்க்ட்இன் (LinkedIn)-இல், இந்தியாவில் புதிய பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
டிக்டாக் நிறுவனத்தின் இந்த நடவடிக்கை, இந்தியாவில் அதன் சேவை மீண்டும் தொடங்கப்படலாம் என்ற ஊகங்களுக்கு வழிவகுத்துள்ளது. ஆனால், இதுகுறித்து நிறுவனம் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
in
இந்தியா