ஆளுநர் கம்பு சுத்த வேண்டியது தமிழகத்தில் அல்ல! - தர்மபுரியில் முதல்வர் ஸ்டாலின் அதிரடி சாடல்!

ஆளுநர் கம்பு சுத்த வேண்டியது தமிழகத்தில் அல்ல! - தர்மபுரியில் முதல்வர் ஸ்டாலின் அதிரடி சாடல்!

"ஆளுநர் கம்பு சுத்த வேண்டியது தமிழகத்தில் அல்ல!" - தர்மபுரியில் முதல்வர் ஸ்டாலின் அதிரடி சாடல்!


பாஜக ஆளும் மாநிலங்களில்தான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் நடப்பதாகவும், உண்மைக்குப் புறம்பாக ஆளுநர் அவதூறு பரப்புகிறார் என்று முதலமைச்சர் குற்றச்சாட்டியுள்ளார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக அரசுக்கு எதிராக அவதூறுகளைப் பரப்புவதாகக் குற்றம் சாட்டிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், "ஆளுநர் கம்பு சுத்த வேண்டியது தமிழகத்தில் அல்ல, பாஜக ஆளும் மாநிலங்களில் தான்" எனத் தர்மபுரி அரசு நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.

தர்மபுரி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், ரூ.1,705 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், புதிய திட்டப் பணிகளுக்கான அடிக்கல்லையும் நாட்டினார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் முதன்முறையாக விவசாயிகளுக்கு இ-கிசான் கிரெடிட் கார்டு (E-KCC) மூலம் பயிர்க்கடன் வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நிறைவேற்ற முடியாத திட்டங்கள் என விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், கடந்த ஆட்சியில் நிதிநிலைமை சீர்குலைந்து போன நிலையிலும், நாங்கள் பொறுப்பேற்ற பிறகு, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம். மகளிருக்கு மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை அளிப்பதன் மூலம், 51 மாதங்களில் ஒரு குடும்பத்திற்கு ரூ.50,000 வரை கிடைத்திருக்கிறது என்று குறிப்பிட்டார். மேலும், இந்த விடியல் திட்டங்களைக் கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களும் முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.

ஆளுநரின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்த அவர், அரசியல் செய்வதை விடவும் மலிவான அரசியல் செய்வது ஒன்றிய ஆளுநர். திராவிடத்தை பழிப்பார்; சட்டங்களுக்கு ஒப்புதல் தரமாட்டார்; உண்மைக்குப் புறம்பாக இல்லாததையும் பொல்லாததையும் பேசிப் பீதியைக் கிளப்புவாரெனச் சாடினார். இந்தியாவிலேயே தமிழகம் தலைசிறந்த மாநிலமாக இருப்பதற்கான சான்றுகள், மத்திய பாஜக அரசால் வெளியிடப்பட்ட புள்ளிவிபரங்களேயென அவர் கூறினார்.

இந்தியாவில் பெண்களுக்கு எதிராக அதிக குற்றங்கள் நடைபெறும் மாநிலங்களில் பாஜக ஆளும் உத்தரபிரதேசம் தான் முதலிடத்தில் உள்ளது. எனவே ஆளுநர் கம்பு சுத்த வேண்டியது தமிழ்நாட்டில் அல்ல, பாஜக ஆளும் மாநிலங்களில்தான்" என முதல்வர் ஸ்டாலின் ஆவேசமாகப் பேசியுள்ளார்.


புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks