குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: பிரதமர் மோடி தலைமையில் இன்று 'முக்கிய' ஆலோசனை!

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: பிரதமர் மோடி தலைமையில் இன்று 'முக்கிய' ஆலோசனை!

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: பிரதமர் மோடி தலைமையில் இன்று 'முக்கிய' ஆலோசனை!


குடியரசு துணைத் தலைவர் தேர்தல் தொடர்பாக, பாஜக எம்.பிக்களுடன் பிரதமர் மோடி இன்று முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளதாகவும்,  பாஜகவால் பரிந்துரைக்கப்படும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒருமித்த வேட்பாளர் ஆகஸ்ட் 21ம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்வாரெனத் தகவல் வெளியாகியுள்ளது. 

நாட்டின் அடுத்த குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளரைத் தேர்வு செய்வது தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று பாஜக எம்.பி.க்களுடன் முக்கிய ஆலோசனை நடைபெறுகிறது.

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) ஒருமித்த வேட்பாளரை, ஆளும் பாஜக கட்சிதான் முன்னிறுத்தவுள்ளது. அந்தக் கட்சியின் எம்.பி.க்களுடன் நடத்தப்படும் இந்த உயர்மட்ட ஆலோசனை, வேட்பாளர் யார் என்பது குறித்து இறுதி முடிவெடுக்கும் நோக்கில் நடைபெறுகிறது. வேட்பாளர்குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர் வரும் ஆகஸ்ட் 21-ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்வாரெனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த குடியரசு துணைத் தலைவர் யார் என்பது குறித்த எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் உச்சத்தை எட்டியுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, பாஜக தலைமையிலான கூட்டணி, ஒருமித்த வேட்பாளரை விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks