மயக்கமடைந்தது போல் நடித்துப் புரோகிதரிடம் நகை திருட்டு.. ரேபிடோ ஓட்டுனர் கைது! Chennai Robbery: Rapido Driver Arrested for Stealing Gold

மயக்கமடைந்தது போல் நடித்துப் புரோகிதரிடம் நகை திருட்டு.. ரேபிடோ ஓட்டுனர் கைது!  Chennai Robbery: Rapido Driver Arrested for Stealing Gold

மயக்கமடைந்தது போல் நடித்துப் புரோகிதரிடம் நகை திருட்டு.. ரேபிடோ ஓட்டுனர் கைது!

புரோகிதரின் கவனத்தை திசைத்திருப்பி சாமார்த்தியமாகக் கொள்ளை! சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

சென்னை, எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த 61 வயது புரோகிதர் அனில் குமார், மயக்கமடைந்தது போல நடித்த ரேபிடோ பைக் ஓட்டுனர் ஒருவரிடம் தங்க நகைகளை இழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் ரேபிடோ ஓட்டுனரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எம்.ஜி.ஆர். நகர், சீத்தலை சாத்தனார் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வரும் அனில் குமார், கடந்த 8-ஆம் தேதி நீலாங்கரைக்குச் செல்லத் தனது மகளின் செல்போன் மூலம் ரேபிடோ பைக் ஒன்றை புக் செய்துள்ளார். நீலாங்கரையிலிருந்து வீடு திரும்பும்போதும் அதே ஓட்டுநரின் பைக்கை பயன்படுத்தியுள்ளார். அதன் பிறகு அந்த ஓட்டுநர் அடிக்கடி அனில் குமாருக்குப் போன் செய்து, பைக் தேவைப்படுகிறதா என்று கேட்டுப் பேசியுள்ளார்.

இந்தப் பழக்கத்தின் மூலம், தான் கஷ்டப்படுவதாக ஓட்டுநர் அனில் குமாரிடம் கூறியுள்ளார். இதை நம்பிய அனில் குமார், வீட்டில் உள்ள பழைய துணிகளை வந்து எடுத்துச் செல்லுமாறு அவரை அழைத்துள்ளார். இதனையடுத்து, நேற்று முன்தினம் அந்த ஓட்டுநர் தனது நண்பருடன் அனில் குமாரின் வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது, அந்த ரேபிடோ ஓட்டுநர் திடீரென மயங்கி விழுவது போல் நடித்துள்ளதுடன், அனில் குமாரின் கவனத்தை திசை திருப்பி, அவர் அணிந்திருந்த தங்க நகைகளைத் திருடியுள்ளார். அவர்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்ற பிறகே, தான் ஏமாற்றப்பட்டதை அனில் குமார் உணர்ந்துள்ளார்.

உடனே எம்.ஜி.ஆர். நகர் காவல் நிலையத்தில் அனில் குமார் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை நடத்தி ரேபிடோ ஓட்டுநரைக் கைது செய்தனர். விசாரணையில், அவர் அயனாவரத்தைச் சேர்ந்த 23 வயதான டேவிட் இளவரசன் என்பதும், அவர்மீது ஏற்கனவே அயனாவரம் காவல் நிலையத்தில் வழக்குகள் இருப்பதும் தெரியவந்துள்ளது. தலைமறைவாக உள்ள அவரது நண்பரான கங்காதரனை போலீசார் தேடி வருகின்றனர்.

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks