சென்னையில் சிபிஐ சோதனை: தங்க நகை முறைகேடு தொடர்பாக சோதனை!
சென்னையில் தங்க நகை வியாபாரம் தொடர்பான முறைகேடுகள் குறித்து, சிபிஐ (CBI) அதிகாரிகள் இன்று பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.
மீனம்பாக்கம் மற்றும் பூக்கடை ஆகிய பகுதிகளில் இந்தச் சோதனை நடைபெற்று வருகிறது. இது தவிர, செங்கல்பட்டு மாவட்டத்திலும் ஒரு இடத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சோதனை நடைபெறும் இடங்கள்:
பூக்கடை, வெங்கையா தெரு: நகை வியாபாரி சுனில் என்பவரது வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
அண்ணாநகர் மேற்கு விரிவாக்கம்: சுங்கத்துறை அதிகாரி சுரேஷ் என்பவரது வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது.
இந்தச் சோதனை, தங்க நகை வியாபாரத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
in
தமிழகம்