Gold Price: ஒரு கிராம் தங்கம் ரூ.9, 620க்கு விற்பனை.. உயர்ந்து வரலாறு காணாத விலை!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 உயர்ந்து, சவரன் ரூ.76, 960 மற்றும் ஒரு கிராம் தங்கம் ரூ.9,620க்கு விற்பனையாகிறது.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.76,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு, கடந்த சில மாதங்களில் இல்லாத அளவுக்கு வரலாறு காணாத ஏற்றமாக அமைந்துள்ளது.
நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.9,535-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று கிராமுக்கு ரூ.85 உயர்ந்து ரூ.9,620-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு, முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது கவனம் செலுத்துவது போன்ற காரணங்களால் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், நகை வாங்குவோர் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.