மேற்கு வங்க அரசு புதிய உத்தரவு: தினமும் ஒரு பெங்காலி திரைப்படம் கட்டாயம்!

மேற்கு வங்க அரசு புதிய உத்தரவு: தினமும் ஒரு பெங்காலி திரைப்படம் கட்டாயம்!


மேற்கு வங்கத்தில் உள்ள திரையரங்குகளின் அனைத்து ஸ்க்ரீன்களிலும், PRIME TIME நேரத்தில் (மதியம் 3 - இரவு 9) தினமும் குறைந்தபட்சம் ஒரு காட்சி பெங்காலி படத்தைத் திரையிட வேண்டும் என்று மேற்கு வங்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளும், தினமும் குறைந்தபட்சம் ஒரு பெங்காலி திரைப்படத்தைத் திரையிடுவது கட்டாயம் என மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தப் புதிய அறிவிப்பு சினிமா துறையில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த உத்தரவின்படி, மதியம் 3 மணி முதல் இரவு 9 மணி வரையிலான 'பிரைம் டைம்' நேரத்தில், திரையரங்கின் ஒவ்வொரு திரையிலும் ஒரு பெங்காலி திரைப்படத்தின் காட்சியைத் திரையிட வேண்டும். இது, பிற மொழிப் படங்களைவிட, பெங்காலி படங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் விதமாகப் பார்க்கப்படுகிறது.

பெங்காலி மொழி திரைப்படங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கவும், உள்ளூர் கலைஞர்களுக்கு ஆதரவு அளிக்கவும் இந்த 'முடிவு' எடுக்கப்பட்டுள்ளதாக மேற்கு வங்க அரசு தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை, பெங்காலி சினிமாவுக்கு புத்துயிர் அளிக்கும் எனத் திரைப் பிரபலங்கள் மத்தியில் நம்பிக்கை அதிகரித்துள்ளது. அதேசமயம், இந்த விதிமுறை பிற மொழிப் படங்களின் வசூலை பாதிக்குமா என்ற விவாதமும் தற்போது எழுந்துள்ளது.

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

Swiggy

When Hunger Calls, Swiggy Delivers!