தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு.. நீலகிரி, கோவை மாவட்டங்களுக்குக் கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு.. நீலகிரி, கோவை மாவட்டங்களுக்குக் கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு.. நீலகிரி, கோவை மாவட்டங்களுக்குக் கனமழை எச்சரிக்கை!


சென்னை உள்ளிட்ட தென் மற்றும் வட மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், அடுத்த சில தினங்களுக்கும் மழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த சில தினங்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று (ஆகஸ்ட் 17) நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழகம் முழுவதும் தென் மாவட்டங்கள், வட மாவட்டங்கள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

2025 ஆகஸ்ட் 18ஆம் தேதி வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது. இதன் காரணமாக ஆகஸ்ட் 17 முதல் 22 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில் மிதமான மழை

சென்னையைப் பொறுத்தவரை, இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33 முதல் 34 டிகிரி செல்சியஸ் வரையும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸ் வரையும் இருக்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது.


புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks