சத்தீஸ்கர் குழந்தை கடத்தல்: தமிழகத்தில் குற்றவாளி கைது!

 சத்தீஸ்கர் குழந்தை கடத்தல்: தமிழகத்தில் குற்றவாளி கைது!

 சத்தீஸ்கர் குழந்தை கடத்தல்: தமிழகத்தில் குற்றவாளி கைது!


சத்தீஸ்கர் மாநிலம் துர்க் ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட ஒன்றரை வயது ஆண் குழந்தை, சுமார் 43 நாட்களுக்குப் பிறகு, திருவிடைமருதூர் அருகே திருநீலக்குடியில் "அதிரடியாக" மீட்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமரா உதவியுடன் துணிச்சலாகக் குழந்தையைக் கடத்திய நபரைச் சத்தீஸ்கர் மாநில போலீசார் கைது செய்து, குழந்தையுடன் இன்று சத்தீஸ்கர் புறப்பட்டுச் சென்றனர்.

கடந்த ஜூன் மாதம் 27-ஆம் தேதி, துர்க் ரயில் நிலையத்தில் தங்கியிருந்த சூர்யா தாகூர், சோனு திவாரி தம்பதியினர், தங்கள் குழந்தையை அங்கேயே வைத்துவிட்டு டீக்குடிக்கச் சென்றபோது, குழந்தை காணாமல் போனது. உடனடியாகப் புகார் அளிக்கப்பட்ட நிலையில், ரயில் நிலைய சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், குழந்தையுடன் ஒரு நபர் டிக்கெட் கவுண்டரில் டிக்கெட் வாங்கியதைக் கண்டறிந்தனர். அந்த முன்பதிவு சீட்டின் உதவியுடன், குழந்தையைக் கடத்திய ஆறுமுகம் என்பவரின் பெயர், முகவரி, தொலைபேசி எண்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, ஆறுமுகத்தின் செல்போன் சிக்னலை வைத்து, அவர் திருவிடைமருதூர் அருகே உள்ள திருநீலக்குடியில் இருப்பதைக் கண்டறிந்த சத்தீஸ்கர் மாநில போலீசார், குழந்தையின் பெற்றோருடன் நேற்று முன்தினம் இங்கு வந்தனர். திருவிடைமருதூர் மற்றும் சீர்காழி போலீசாரின் உதவியுடன், ஆறுமுகத்தின் உறவினர் வீட்டில் இருந்த குழந்தையை மீட்டு, ஆறுமுகத்தையும் சமயோஜிதமாகக் கைது செய்தனர். 

இந்தச் சம்பவம்குறித்து காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கும்போது, "குழந்தையை அதிர்ஷ்டவசமாக நீங்கக் கண்டுபிடித்து விட்டீர்கள், இன்னும் அதிக தொகைக்கு விற்காமல் வைத்திருந்தது அந்தக் குழந்தையின் அதிர்ஷ்டம்" என்று ஆறுமுகம் கூறியதாகத் தெரிகிறது. இந்தப் பரபரப்புச் சம்பவம் திருநீலக்குடி மட்டுமல்லாமல் கும்பகோணம் பகுதியிலும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.


புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks