"பாகிஸ்தானிடம் இந்தியா முழுமையாகச் சரணடைந்துவிட்டது" - ராகுல்காந்தி குற்றச்சாட்டு
பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தானிடம் இந்தியா முழுமையாகச் சரணடைந்துவிட்டதாகவும், இந்தியா ராணுவத்தையும், வெளியுறவுக்கொள்கையையும் சீரழித்து விட்டதாக ராகுல் காந்தி சாடியுள்ளார்.
மக்களவையில் நடைபெற்ற ஆபரேசன் சிந்தூர் குறித்த விவாதத்தில் பேசிய அவர், பஹல்காமில் நடந்தது ஒரு கொடூரமான தாக்குதல் எனவும், பாகிஸ்தான் அரசால் தெளிவாகத் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட இதயமற்ற தாக்குதல் இது எனவும் குறிப்பிட்டார். பாகிஸ்தானிடம் இந்தியா முழுமையாகச் சரணடைந்துவிட்டதாகவும், தாக்குதல்குறித்து பாகிஸ்தானுக்கு முன்கூட்டியே தகவல் சொன்னது தவறு என்றும் குற்றஞ்சாட்டினார்.
இந்தியா - பாகிஸ்தான் சண்டையை நிறுத்தியதாக டிரம்ப் 29 முறை கூறிவிட்டார் எனவும், டிரம்பை பொய்யர் என்று கூற மோடிக்கு தைரியம் உள்ளதா என்று ராகுல் காந்தி சவால் விடுத்தார். பஹல்காம் தாக்குதலுக்கு ஒரு நாடு கூடப் பாகிஸ்தானை கண்டிக்கவில்லை என்று கூறிய ராகுல், காங்கிரஸ் ஆட்சியில் பாகிஸ்தானை உலக நாடுகள் கண்டித்ததாகக் கூறினார்.
தாக்குதலுக்கான தகவல் முன்கூட்டியே பாகிஸ்தானுக்கு சென்றது மிகப்பெரிய தவறு எனச் சாடிய ராகுல், இந்தச் சம்பவம் இந்திய ராணுவத்தின் நம்பிக்கைக்கும், வெளியுறவுக் கொள்கைக்கும் பிழை ஏற்படுத்தும் வகையிலும் நடந்துவிட்டதாகக் குறிப்பிட்டார்.
பாகிஸ்தான் ராணுவத் தலைவருக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் விருந்தளித்ததை சுட்டிக்காட்டிய ராகுல், “வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எந்தக் கிரகத்தில் இருக்கிறார்?” எனக் கேள்வி எழுப்பினார். மேலும், பாகிஸ்தான் மற்றும் சீனாவைப் பிரிக்கும் வகையில் மோடி அரசின் வெளியுறவுக் கொள்கை தோல்வியடைந்துவிட்டதாகவும் விமர்சித்தார்.
ராணுவத்தை நாட்டைப் பாதுகாக்க பயன்படுத்த வேண்டுமே தவிர, பிரதமர் மோடியின் புகழுக்காகப் பயன்படுத்தக் கூடாது என வலியுறுத்திய ராகுல், ராணுவ நடவடிக்கைக்கும் அரசியல் நோக்கங்களுக்கும் தெளிவான வேறுபாடு தெரியாது என்பது மோடி அரசின் மிகப்பெரிய பிழைஎனக் குற்றம் சாட்டினார்.
இந்த அறிக்கைகள் அனைத்தும், தேசிய பாதுகாப்பு குறித்து கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தி, மக்களவையிலும் வெளி அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ராகுல்காந்தி, காங்கிரஸ் ஆட்சியில் பாகிஸ்தானை உலக நாடுகள் கண்டித்ததாகக் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
in
இந்தியா