அடுத்தடுத்து ஏற்பட்ட வாகன விபத்து : ஒருவர் உயிரிழந்தார் - 6 பேர் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதி!
கோவை அவினாசி சாலையில் சின்னியம்பாளையம் பகுதியில் கோவையில் ஆம்னி பேருந்துக் கட்டுப்பாட்டை இழந்து, நேற்று இரவு (ஜூலை 25) ஏற்பட்ட பயங்கர விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், ஆறு பேர் படுகாயமடைந்தனர்.
கோவை, காந்திபுரம் ஆம்னி பேருந்து நிலையத்திலிருந்து பெரம்பலூருக்கு ஆம்னி பேருந்து ஒன்று சென்று கொண்டு இருந்தது. அவிநாசி சாலையில் சின்னியம்பாளையம் என்ற இடத்தில் ஆம்னி பேருந்து சென்று கொண்டு இருந்தபொழுது, திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் அடுத்தடுத்து வாகனங்கள்மீது மோதியது. இரண்டு கார்கள், ஒரு லாரி மற்றும் நான்கு இருசக்கர வாகனங்கள்மீது அடுத்தடுத்து ஆம்னி பேருந்து மோதியது. இதில் சுந்தர்ராஜன் என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் வாகனங்களில் வந்த 6 பேர் இந்த விபத்தில் காயம் அடைந்தனர்.
இந்த விபத்தில் சுந்தரராஜன் (54) என்ற நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த ஆறு பேரைப் பொதுமக்கள் மற்றும் மீட்புக் குழுவினர் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். விபத்தால் கார்கள் பலத்த சேதமடைந்தன.
பீளமேடு காவல்துறையினர் சம்பவம்குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், பேருந்து ஓட்டுநர் ஒரு பயணியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தபோது வாகனம் கட்டுப்பாட்டை இழந்திருக்கலாமெனத் தெரியவந்துள்ளது.
இந்த விபத்து இரவு நேரத்தில் நிகழ்ந்ததால், அவினாசி சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி, பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரவு நேரத்தில் நடைபெற்ற இந்த விபத்து காரணமாக அவிநாசி சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.இதன் இடையே பேருந்துக் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் அடுத்தடுத்து வாகனங்கள்மீது மோதும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.