மாதம் ரூ.5,000 செலுத்தினால் ரூ.8.5 லட்சம் ஜாாக்பாட்: அஞ்சல் துறையின் மிரட்டும் திட்டம்!
கூட்டு வட்டி, கடன் வசதி என டபுள் லாபம்! பாதுகாப்பான முதலீட்டில் குவிந்து வரும் மக்கள்!
சேலம்: சிறு சேமிப்பு; பெரிய லாபம்! என்ற தாரக மந்திரத்துடன், இந்திய அஞ்சல் துறையின் ரெக்கரிங் டெபாசிட் திட்டம், தற்போது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மாதந்தோறும் வெறும் ரூ.5,000 முதலீடு செய்தால், முடிவில் ரூ.8.5 லட்சம் வரை பெறும் மிரட்டலான வாய்ப்பை இத்திட்டம் வழங்குவதாக அஞ்சல் துறை அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பாதுகாப்பான முதலீட்டைத் தேடும் சாமானிய மக்களுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பு என்று நிதி ஆலோசகர்கள் கணிக்கின்றனர்.
அஞ்சல் துறையின் இந்த ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தில், மாதந்தோறும் ரூ.5,000 டெபாசிட் செய்தால், தற்போது 6.7% வட்டி விகிதம் கிடைக்கும். இதில் கூட்டு வட்டியும் உண்டு என்பதுதான் இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சம். இந்த வட்டி விகிதம், வங்கிகளின் சேமிப்புத் திட்டங்களை விட சற்று அதிகம் என்பதும், 'கவர்ச்சிகரமான' கூடுதல் சிறப்பு.
இந்தத் திட்டத்தில், ஒருவர் 5 ஆண்டுகள் தொடர்ச்சியாக மாதந்தோறும் ரூ.5,000 டெபாசிட் செய்தால், முதலீட்டு காலம் முடிவடைந்ததும் அவருக்கு மொத்தமாக ரூ.3,56,830 கிடைக்கும். இது பாதுகாப்பான முதலீட்டில் கிடைக்கும் ஒரு நல்ல வருமானம் என்று கருதப்படுகிறது. மேலும், முதலீட்டாளர்கள் நீண்டகாலப் பார்வையில் சிந்தித்தால், அதிகபட்சப் பலனை பெறலாம். அதாவது, 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக முதலீடு செய்தால், மொத்தமாக ரூ.8,54,272 கிடைக்கும். இது ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் கூடுதல் வருமானம். ஒரு சிறு சேமிப்பு மூலம் பெரிய தொகையைப் பெறும் அரிய வாய்ப்பை அஞ்சல் துறை வழங்கியுள்ளது.
இது தவிர, அவசரக் காலங்களில் முதலீட்டாளர்களுக்கு உதவும் வகையில் கடன் பெறும் வசதியும் உண்டு. இந்தக் கடன் வசதி, திட்டத்தின் பயன்பாட்டை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டம் குறித்த கூடுதல் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் நடைமுறைகள் குறித்து, அருகில் உள்ள அஞ்சலகத்தில் நேரடியாக அறிந்து கொள்ளலாம். கோடீஸ்வர கனவு காணும் நடுத்தர வர்க்கத்தினருக்கு இது ஒரு சிறந்த தொடக்கமாக இருக்கும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.