One Last Time... என் நெஞ்சில் குடியிருக்கும்... 15 நிமிடங்கள் 1 மில்லியன் பார்வையாளர்கள்... வரலாறு படைத்த க்ளிமஸ் வீடியோ!

One Last Time... என் நெஞ்சில் குடியிருக்கும்... 15 நிமிடங்கள் 1 மில்லியன் பார்வையாளர்கள்... வரலாறு படைத்த க்ளிமஸ் வீடியோ!
One Last Time... என் நெஞ்சில் குடியிருக்கும்... 15 நிமிடங்கள் 1 மில்லியன் பார்வையாளர்கள்... வரலாறு படைத்த க்ளிமஸ் வீடியோ!


தமிழ் சினிமாவில் தனக்கெனத் தனி ரசிகர் பட்டாளத்தை குவித்து வைத்துள்ள உச்ச நட்சத்திர நடிகரும், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய் தனது 51வது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார். அவரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரின் கடைசித் திரைப்படமாக அறிவிக்கப்பட்டுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படத்தின் க்ளிமஸ் வீடியோ வெளியாகிப் புதிய சாதனையைப் படைதுள்ளது. 

தமிழ் சினிமாவின் இளைய தளபதி நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் கடைசி திரைப்படம் ‘ஜன நாயகன்’ உலகமெங்கும் உள்ள அவரது ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் கடந்த ஆண்டு அரசியல் கட்சியைத் தொடங்கினார். கட்சி ஆரம்பிக்கும் பொழுதே 2026 சட்டமன்ற தேர்தலை இலக்காகக் கொண்டே களமிறங்குவதாக அறிவித்தார். 

அதன் பின்னர் எச். வினோத் இயக்கத்தில் நடிக்கும் ஜன நாயகன் திரைப்படமான தனது சினிமா வாழ்க்கையின் கடைசி திரைப்படமாக இருக்கும் என்று அறிவித்தார். இத்திரைப்படம் விஜய்யின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. அப்போது முதலே நடிகர் விஜயின் ரசிகர்கள் தன்னுடைய முடிவை மாற்றிக்கொள்ளும்படி தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். 

இந்நிலையில், நடிகர் விஜய் இன்று (ஜூன் 22 ) ஆம் தேதி, தன்னுடைய 51-வது பிறந்த நாளை முன்னிட்டு, விஜயின் ரசிகர்களுக்காகப் பிரத்யேகமாக ஜனநாயகன் திரைப்படத்தின் முதல் க்ளிம்ப்ஸை படக்குழு வெளியிட உள்ளதாக அறிவித்தது. அதன்படி சரியாக 12 மணிக்கு ( FIRST ROAR ) ஜனநாயகன் திரைப்படத்தின் முதல் க்ளிம்ப்ஸை படக்குழு வெளியிட்டது. 

ஜனநாயகன் திரப்படத்தின் FIRST ROAR வெளியான 15 நிமிடங்களில் Youtube-ல் 1 மில்லியனுக்கும் மேலான ரியல் டைம் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்துள்ளதாக அந்தத் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான KVN PRODUCTION நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ரசிகர்களும் இதனைப் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.  

மேலும், தேர்தல் நெருங்கி வருவதால், ஜனநாயகன் திரைப்படத்தில் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகள் முடிவடைந்து மற்றப்பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நடிகர் விஜயின் திரை வாழ்க்கையில் கடைசி திரைப்படமாக ஜனநாயகன் உள்ளதால், அத்திரைப்படம் வெளியாகும் நாளை எதிர்நோக்கி விஜய் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். 

விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்துள்ள "ஜன நாயகன்" படத்தின் பர்ஸ்ட் ரோர் வெளியாகி இருக்கிறது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் இந்தப் பர்ஸ்ட் ரோர் வீடியோ வெளியான 15 நிமிடங்களில் 1 மில்லியனுக்கும் அதிகமாக ரியல் டைம் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளதாகப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான KVN புரொடக்ஷன்ஸ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் எச்.வினோத் இயக்கத்தில் 'ஜன நாயகன்' படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாகப் பூஜா ஹெக்டே நடிக்கிறார். வில்லனாகப் பாபி தியோல் நடிக்கிறார். இவர்களுடன் சேர்ந்து முக்கிய கதாபாத்திரங்களில் நரேன், மமிதா பைஜு, பிரியாமணி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 9-ம் தேதி உலகளவில் வெளியாக உள்ளது. 'ஜன நாயகன்' படத்திற்கு பிறகு முழு நேர அரசியலில் விஜய் ஈடுபட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

FIRST ROAR எப்படி இருக்கு?

நடிகர் விஜய் பிறந்த நாளுக்காக ப்ரத்யேகமாக வெளியான இந்த க்ளிம்ஸ் வீடியோவின் என்ட்ரியில் நடிகர் விஜயின் குரலில் ‘என் நெஞ்சில் குடியிருக்கும்’ என்ற அவருக்குப் பிடித்தமான வசனத்துடன் தொடங்குகிறது. சுற்றி நெருப்பு போர்க்களம் போல் காட்சியளிக்கும் ஒரு பகுதியில் கையில் வாளுடன் போலீஸ் உடையில் கம்பீரமாக முறுக்கு மீசையுடன் கெத்தாக விஜய் நடந்து வருகிறார். விஜயின் இந்தக் கெட்டப் ‘மெர்சல்’ படத்தை ரசிகர்களுக்கு நினைவுப்படுத்துகிறது. விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகியுள்ள இந்த க்ளிம்ஸ் வீடியோவை விஜய் ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். 

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks