யூடியூபர் சவுக்கு சங்கர் மீது புகார்‌.. நஷ்ட ஈடு கேட்கும் தயாரிப்பாளர்! Complaint filed against YouTuber Savukku Shankar.. Producer seeks compensation!

யூடியூபர் சவுக்கு சங்கர் மீது புகார்‌.. நஷ்ட ஈடு கேட்கும் தயாரிப்பாளர்! Complaint filed against YouTuber Savukku Shankar.. Producer seeks compensation!
யூடியூபர் சவுக்கு சங்கர் மீது புகார்‌.. நஷ்ட ஈடு கேட்கும் தயாரிப்பாளர்!
சவுக்கு சங்கர் மீது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். 

சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த மகேஷ் ரம்யா. இவர் திரைப்பட தயாரிப்பாளர்.  இவர் இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து மகேஷ் ரம்யா செய்தியாளர்களை சந்தித்தார். 

நானும் ஆயிஷா சாதிக், மற்றும் அபிராமி வீரமணி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் "ரெட் அண்ட பாலோ" ஆகும். இதில் பிக் பாஸ் பிரபலங்கள் 5 நபர்கள் மற்றும் முன்னனி காமெடி நடிகர்கள் இருவரும் மற்றும் அஜய் வாண்டையார் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

அஜய் வாண்டையார், இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்சமயம் அவர் ஏதோ ஒரு வழக்கில் சிக்கியுள்ளார். இதனை காரணம் காட்டி You Tube- ல் சவுக்கு சங்கர் தவறாக ஒரு வதந்தியை பரப்பி வருகிறார்.  அதாவது ரெட் அடை பாளே படத்தை போதை பொருட்களில் இருந்து வந்த வருமானத்தை கொண்டு எடுத்த படம் என்று புரவி கிளப்பி வருகிறார். 

இது முற்றிலும் தவறான செயலாகும். தயாரிப்பாளர்களாகிய நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டு நீண்ட இடைவெளிக்கு பிறகு நாங்கள் படம் பண்ணவேண்டும் என்ற நோக்கத்தினாலும் எங்களது சுய பணத்தினாலும், எங்களிடமிருந்த அனைத்து பணம் மற்றும் நகைகள் மற்றும் சேமிப்புகளிலிருந்து வந்த வருமானத்தை கொண்டு எடுக்கப்பட்ட படமாகும். 

இதில் அஜய் வாண்டாயாருக்கு எந்தவிதமான பணத் தொடர்பும் கிடையாது. பண உதவியும் செய்யவில்லை. அவர் எங்களது படத்தில் நடித்த ஒரு கதாபாத்திரம் மட்டுமே ஆகும். ஆனால் சவுக்கு சங்கர் வேண்டாத வதந்தியை பரப்பியதால் எங்களது படத்தை வாங்குவதற்கு தயாராக இருந்து நிறுவனங்கள் தற்போது எங்களது படத்தை வாங்குவதற்கு பின்வாங்குகின்றனர். 

இதனால் எங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை சவுக்கு சங்கர் பொறுப்பேற்றுக் கொண்டு நாங்கள் தயாரித்த படத்திற்கு நஷ்ட ஈடு தரவேண்டும். மேலும் எங்களிடம் மன்னிப்பு கோர வேண்டும். சவுக்கு சங்கர் தவறாக பரப்பிய வதந்தி அதாவது போதை பொருளில் விற்ற காசினால் தயாரித்த படம் என்று கூறியதால் நாங்கள் மிகவும் மன் உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம். ஆனால் சவுக்கு சங்கரால் எங்களது எதிர்காலம் பாழாகி விட்டது. இதனால் எங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்திற்கு எங்களுக்கு நஷ்ட ஈடு வழங்கவேண்டும். நாங்கள் தயாரித்த படத்திற்குண்டான செலவுகள் அனைத்தையும் கணக்கீடு செய்து அந்த தொகையை எங்களுக்கு நஷ்டஈடாக தரவேண்டும். சவுக்கு சங்கரால் ஏற்பட்ட மனைஉளைச்சலுக்கு மானக்குறைவுக்கு அவர் மீது மான நஷ்ட ஈடு வழக்கு தொடர கேட்டுக் கொள்கிறோம் என்று தயாரிப்பாளர் மகேஷ் ரம்யா தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks