வயநாடு காங்கிரஸ் எம். பி. பிரியங்கா காந்திக்கு கேரள உயர்நீதிமன்றம் நோட்டீஸ்..!

வயநாடு காங்கிரஸ் எம். பி. பிரியங்கா காந்திக்கு கேரள உயர்நீதிமன்றம் நோட்டீஸ்..!


வயநாடு காங்கிரஸ் எம். பி. பிரியங்கா காந்திக்கு கேரள உயர்நீதிமன்றம் நோட்டீஸ்..!

வயநாடு தொகுதி நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக பாஜக வேட்பாளர் நவ்யா ஹரிதாஸ் தாக்கல் செய்த மனுவை 
விசாரிக்க உயர் நீதிமன்றம் ஒரு மாதத்திற்குள் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.

கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதியில் கடந்த மக்களவை பொது தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ராகுல் காந்தி வெற்றி பெற்றார் . ராகுல் காந்தி இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றதால் வயநாடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். அதைத்தொடர்ந்து அந்த தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில், அவரது சகோதரி பிரியங்கா காந்தி போட்டியிட்டு வெற்றி பெற்றார். பிரியங்கா காந்தியை எதிர்த்து பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ் என்பவர் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். தேர்தலின் போது தாக்கல் செய்த வேட்பு மனுவில், தனது சொத்து விவரங்கள் குறித்து உண்மைக்கு புறம்பாக பிரியங்கா காந்தி பதிவு செய்திருந்ததாகவும், குடும்ப உறுப்பினர்களின் சொத்து விபரங்களை குறிப்பிடாமல் மறைத்ததாகவும் குற்றம் சாட்டி, அவரது தேர்தல் வெற்றிக்கு எதிராக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதி மன்றம் இன்று பிரியங்கா காந்திக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இவ்விவகாரம் குறித்து ஒரு மாதத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks