Ahmedabad Plane Crash: விழுந்து நொறுங்கிய போயிங் 787 விமானம்.. 242 பயணிகளுடன் நிலை என்ன?

Ahmedabad Plane Crash:  விழுந்து நொறுங்கிய போயிங் 787 விமானம்.. 242 பயணிகளுடன் நிலை என்ன?

Ahmedabad PlaneCrash:  விழுந்து நொறுங்கிய ஏர் இண்டியா விமானம்.. 242 பயணிகளுடன் நிலை என்ன?

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து 242 பயணிகளுடன் லண்டன் புறப்பட்ட AI171 போயிங் 787-8 ட்ரீம்லைனர் ஏர் இண்டியா பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட பயணிகள் விமானம், விமான நிலையம் உள்ளே விழுந்து விபத்து ஏற்பட்டது. அகமதாபாத் விமான நிலைய ஓடுதளத்தில் இருந்து மேல் எழும்பிய சிறுது நேரத்தில் விமானம் விழுந்து விபத்தில் சிக்கியுள்ளது. 

விமான நிலையம் அருகே மெகானி என்ற இடத்தில் உள்ள கோடா கேம்ப் என்ற குதிரை பந்தய மைதானம் அருகே விமானம் விழுந்து நொறுங்கியது. அகமதாபாத்தில் இருந்து 1.17 மணிக்கு புறப்பட்ட விமானம் சில நிமிடங்களில் விபத்தில் சிக்கியுள்ளது. பிற்பகல் 1.50 மணிக்கு விமானம் பறக்கத்தொடங்கிய சிறிது நேரத்தில் எமர்ஜென்சி உதவி கோரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

விமான விபத்தில் சிக்கியுள்ள பயணிகள் மற்றும் குழுவினரை மீட்க ஆம்புலன்ஸ் விரைந்துள்ளது. விமான விபத்து காரணமாக வானை முட்டும் அளவு அப்பகுதியில், கரும்புகை சூழ்ந்துள்ள நிலையில், விமானம் விழுந்து நொறுங்கிய இடத்திற்கு 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் விரைந்துள்ளன.

விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் 242 பயணிகள், 10 பணியாளர்கள், 2 விமானிகள் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மீட்பு பணியில், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் விபத்து நிகழ்ந்த இடத்திற்கு விரைந்துள்ளனர்.

காயங்களுடன் மீட்கப்பட்ட ஏராளமான பயணிகள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்படுகின்றனர். விபத்துக்குள்ளான விமானத்தில் குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி பயணித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

விமான விபத்து தொடர்பாக குஜராத் முதலமைச்சரிடம் உள்துறை அமைச்சர் அமித்ஷா தொலைபேசியில் கேட்டறிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks