"6 மாத கர்ப்பிணி மீது விறகு கட்டையால் தாக்குதல்" - நடந்தது என்ன?

"6 மாத கர்ப்பிணி மீது விறகு கட்டையால் தாக்குதல்" - நடந்தது என்ன?

சேலம்:

தாரமங்கலம் அருகே உள்ள கோணகப்பாடி போத்தனூர் பகுதியை சேர்ந்தவர்கள் சேட்டு-சித்ரா தம்பதி. இவர்களுடைய மகள் மேஷா ஸ்ரீ (வயது 19). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த மூர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இதனால் சேட்டு குடும்பத்தினருக்கு, மூர்த்தி குடும்பத்தினருக்கும் விரோதம் ஏற்பட்டது. இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரு தரப்புக்கும் மோதல் ஏற்பட்டது. அப்போது 6 மாத கர்ப்பிணியான மேஷா ஸ்ரீயை, சேட்டு, சித்ரா மற்றும் உறவினர்கள் விறகு கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மேஷா ஸ்ரீ கொடுத்த புகாரின்பேரில் தாரமங்கலம் போலீசார் சேட்டு, சித்ரா, சிவன், கவுரி ஆகியோர் மீது தாரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதேபோல் சித்ரா கொடுத்த புகாரின்பேரில் மணி, சுசி, வெங்கடேஷ், மகேஸ்வரி, கந்தசாமி, லட்சுமி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks