நாமக்கல்:
எருமபட்டி வட்டார வள மையம் சார்பில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வட்டார அளவிலான வானவில் மன்ற அறிவியல் கண்காட்சி நேற்று நடந்தது. உதவி தலைமை ஆசிரியர் செந்தில்குமார் கண்காட்சியை துவக்கி வைத்தார்.
இதில் 14 பள்ளியில் இருந்து 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களது படைப்புகளை கண்காட்சிக்கு வைத்திருந்தனர். கண்காட்சி நடுவராக ஆசிரியர்கள் கோமதி, சுகந்தி, வனிதா, பெரியசாமி, பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் ஈடுபட்டிருந்தனர்.
முதல் பரிசு கூலிப்பட்டி நடுநிலைப்பள்ளிக்கும், இரண்டாம் பரிசு எருமப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகளுக்கும், மூன்றாம் பரிசு தூசூர் மேல்நிலைப் பள்ளிக்கும், நான்காம் பரிசு எஸ் மேட்டுப்பட்டி அரசு நடுநிலைப் பள்ளிக்கு வழங்கப்பட்டது.
in
தமிழகம்